பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 3

(215

இது கேட்டு அவையோர் ஆரவாரித்தனர். அரசனும் புன் முறுவல் பூத்தான்!

உடனே பொம்மன் எழுந்தான்.

'அரசே! என் நண்பன் கொம்பன் விரும்பிய அதே தொகையளவு பணத்தைப் பொன்னாகக் கொடுத்து, அதே அளவான பவளம் முத்து வைரம் போன்ற ஒன்பது வகை மணிகளை அவற்றுக்குத் துணையாக அரசன் வழங்க வேண்டும் என்பது என் விருப்பம். அத்துடன் வானத்து விண்மீன்களின் அளவான தொகையுடைய அரண்மணை மாட மாளிகை களையும், அப்பணத்தைச் சேமித்து வைக்குமிடமாக அரசன் தந்தருள வேண்டுமென்று விரும்புகிறேன்' என்றான்.

இது கேட்டு அவையோர் முன்னிலும் முழக்கமாக ஆரவாரித்தனர். அரசன் தலைகுலுக்கி மகிழ்ந்தான்.

இப்போது, முக்குறும்பன் முறை வந்தது. அவன்

எழுந்தான்.

6

அரசே! என் நண்பர்கள் இருவரும் தங்கள் இருவர் செல்வங்களுக்கும் உரியவனாக என்னைத் தேர்ந்தெடுத்துப் பத்திரம் எழுதி வைக்க வேண்டும். உடனடியாகச் செல்வங்களை நான் பெறும்படி அரசர் தாமதியாது அவ்விருவரையும் தூக்கிலிட்டு விட வேண்டும். வானுலகத்திலிருந்து என் நண்பர்கள் இருவரும் அரசர் காண என்மீது மலர்மாரி பொழிந்து வாழ்த்தியருள வேண்டும். இது தான் என் விருப்பம்!' என்றான்.

அவையோர் ஆரவாரம் இப்போது காலு மண்டபத்தையே அதிர வைத்தது. அரசனோ குலுங்கக் குலுங்க நகைத்தான்.

பரிசு முக்குறும்பனுக்கே அளிக்கப்பட்டது.

முக்குறும்பனின் குறும்புகள் இப்போது தமிழக முழுமைக்கும் ஒரு வேடிக்கை வினோதமாகத் திகழத் தொடங்கி விட்டது. முக்குறும்பன் என்ற பெயர் இப்போது மூவேந்தர் நாட்டுக்கும் உரிய முடிசூடாக் குறும்பரசன் என்ற பொருளுடைய தாயிற்று. ஆனால், வீணையில் விழுந்த உட்கீறல் போல, இந்தக் குறும்பாட்சியின் புகழுடன் புகழாக, அதனால் கொதித்தெழுந்த