(218)
அப்பாத்துரையம் - 34
இரு துண்டாயிற்று. அவன் அதை முடியிட்டான். பின் அதைக் கழுத்தைச் சுற்றி மாலை போல அணிந்தான்.
மன்னவரே, மன் பேரவையோரே! பெருமக்களே,
தாய்மார்களே!
'நானே என்னைத் தூக்கிட்டுக் கொள்ளும் உரிமை யளித்ததற்கு என் மனமார்ந்த நன்றி.
'இன்று இந்தக் கயிறு அறுந்துவிட்டது.
'இனி ஒரு கயிற்றுச் செலவைக்கூட நான் உங்களுக்கு அளிக்க விரும்பவில்லை.
'உங்கள் பொன்னான நேரத்தை, அலுவல்களைக் கெடுத்து உங்களை இங்கே மீண்டும் வரவழைக்கவும் போவதில்லை.
'நானே இனி என் சொந்தச் செலவில், சொந்தக் கயிறு கொண்டு, என் சொந்தக் கழுத்தில், என் சொந்த நேரத்தில் தூக்கிலிட்டுக்கொள்கிறேன்.
'வணக்கம்'.
அவன் சொல்வது என்னவென்று பிறர் அறியு முன்பாகவே அவன் சரெலென்று மன்றத்திலிருந்து நழுவிக் கூட்டத்திடையே கலந்து மறைந்து விட்டான்.
மன்னனும் பெருமக்களும் மக்களும் விழித்து நின்றார்கள்.
முக்குறும்பன் தூக்கிலிடப்படவில்லை. ஆனால், அவன் குறும்பாட்சி அன்றே தூக்கிடப்பட்டுவிட்டது. அவனையோ அவன் குறும்பையோ பற்றி அதற்குப் பின் யாரும் எதுவும்
கேள்விப்படவில்லை.