பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(220

||-

அப்பாத்துரையம் - 34

தனி மரத்தின் உச்சிக் கிளையிலே நெடுநாளாக ஒரு காய் தொங்கிற்று. பிஞ்சுப் பருவத்தில் இலைகளிடையே ஓர் இலை போல அது மறைந்து கிடந்தது. காய்ப் பருவத்திலே அது இலைக் கொத்துக்களிடையே ஓர் இலைக் கொத்தாகப் பறவைகளின் கண்ணுக்குத் தப்பி வளர்ந்தது. கொப்பு கிளைகளிடையே பதுங்கியிருக்கும் பறவை போல, தோட்டக்காரர் குத்தகைக்காரர் கண்களுக்குத் தப்பி அது பெரிதாயிற்று. சிறுவர் சிறுமியர் கல்லுக்கும் கோலுக்கும் கூடத் தப்பி அது தேங்காய் அளவு கடந்து ஒரு முழு இளநீரளவாகப் பெருத்து வளர்ச்சியுற்றது. கவிந்து கிடந்த உச்சிக் கிளையின் நுனியிலிருந்து அது தலைகீழாகத் தொங்கிற்று. கசத்தின் மையமான மடுவை குறியாகக் கொண்டு நீள்தவம் கிடப்பது போல அது தோற்றமளித்தது.

வையே

தோட்டத்தின் உயிரெலாம் தனி மரத்திலும், தனி மரத்தின் உயிரெலாம் அவ்வுச்சிக் கிளையிலும், அவ்வுச்சிக் கிளையின் உயிரெலாம் அத்தனிப் பெருங்காயிலும் புகுந்து செறிந்து உருப்பெற்றதுபோல அக்காய் விளங்கிற்று. ஏனெனில், அது உண்மையிலேயே தோட்டத்தின் பல பருவ வாழ்க்கைச் செய்திகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் கண்ணாரக் காணும் பேறு பெற்றிருந்தது.

அருவிக்கரைத் தோட்டத்தின் வளம் பெரிது. ஆனால், அதனைக் கொள்ளை கொள்ளாத உயிரினம் இல்லை எனலாம். தேனருவித் தென்றலிலே திவலைகளுடன் திவலைகளாக மிதந்து வந்த வண்டினங்கள் பூப்பருவத்திலே அதன் மணத்தைச் சூறையாடின; பிஞ்சுப் பருவத்திலே மாவடுப் போன்ற அதன் இளங்காய்களைப் புள்ளினங்கள் கொத்திக் கொத்தித் தின்றன. குறவர்குடிச் சிறுவர் சிறுமியர் அதன் உதிர் காய்களை அரித்துத் தின்றனர். உதிராக் காய்கனிகளையும் அவர்கள் கல்லெறிந்தும் கோலெறிந்தும் சிதைத்து வீழ்த்திக் கொக்கரித்தனர்.

தனி மரத்தின் பேரெலுமிச்சங்காய் இத்தனையையும் தொடர்ந்து கண்டு கண்கலங்கியிருந்தது. வண்டுகளின் முரல்வதிர்வில் அதன் உள்ளம் அதிர்வுற்றது. பறவைகளின் இறகுகள் சலசலத்தபோது அதன் உள்ளுயிரும் கலகலத்தது. இனிய தோற்றத்துடன் பசப்பி வந்த இந்த அழகுருவங்கள் தன்