பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(224

அப்பாத்துரையம் - 34

பகைவரை எதிர்த்து நின்றே போராடி நாம் வெற்றி வீறுடன் வாழலாம்' என்று அது இறுமாப்புடன் பேசிற்று.

இவ்வளவு சீரிய துணையும் தலைமையும் கிடைத்த பெருமையில் வெங்காயமும் வெள்ளைப் பூண்டும் தலை தூக்கி நின்றன. படைத் தலைவனைப் பின்பற்றிச் செல்லும் மெய்க்காப்பாளர்போல அவை வீறு நடையிட்டுத் தலைவனைப்

பின்பற்றின.

ஆற்றின் ஒரு வளைவிலே ஒரு சாதிக்காய் மரமும் மிளகாய்த் தோட்டமும் இருந்தன. சாதிக்காய் மரத்திலிருந்து முதிர்ந்த விளைந்த ஒரு சாதிக்காய் கீழே விழுந்து உருண்டோடி ஆற்றுநீரில் மிதந்து வந்தது. அதனைத் தொடர்ந்து செக்கச் செவேலென்று முற்றிப் பழுத்த ஒரு மிளகாயும் மிதந்தோடி வந்தது. எலுமிச்சம்பழப் படைவீரர் அவற்றையும் தம்முடன் சேர்த்துக்கொள்ளலாமா என்று தமக்குள் பேசிக் கொண்டனர். ஆனால், புதிய வீரர்கள் அவர்கள் அழைப்புக்குக் காத்திருக்க வில்லை. தேக்கிலையில் ஆளுக்கு ஒரு கோடியைப் பிடித்துக் கொள்ள பெருமையில் எலுமிச்சங்காய் பொருமிதத்துடன் தலையசைத்தது. வெங்காயமும் வெள்ளைப்பூண்டும் கைகொட்டி ஆர்ப்பரிக்க விரும்பின. ஆனால், அவற்றின் தலையிலுள்ள தாள்கள்தான் ஒன்றுடனொன்று மோதிக் கொண்டன. தமக்குரிய பெருமை மதிக்கப்பட்டதென்ற இறுமாப்புடன் மிளகாய் துப்பாக்கிப் படை வீரன் போலப் பின்னோக்கி விறைப்பாகச் சாய்ந்தமர்ந்து காண்டது. சாதிக்காயோ இரண்டு குட்டிக்கரணங்களிட்டுக் குதித்துத் தேக்கிலை மீதே கும்மாளமிட்டு அமர்ந்தது.

வளைவின் ஒரு மேட்டில் சில கடுகுச் செடிகள் நின்றிருந்தன. எலுமிச்சங்காய்ப் பட்டாளம் செல்லும் இறுமாந்த போக்கைக்கண்டு அவை சிரித்தன. ஆனால், முற்றிய ஒரு நெற்றியிலுள்ள கடுகு விதைகள் சிரிப்பின் வேகத்தில் தெறித்துத் தேக்கிலையிலேயே போய் விழுந்தன. எலுமிச்சங்காய்ப் படைவீரர் இந்தக் கடுகு விதைகள் மீது சீறி, அவற்றை வெளியேற்ற முனைந்தனர். ஆனால் கடுகுகள் உருண்டுருண்டு அவர்கள் பிடியில் விழாமல் வழுகிக்கொண்டே அவர்கள் காலடிகளை வருடின.