பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(226)

அப்பாத்துரையம் - 34

இவ்வாறு அருவிக்கரைத் தோட்டத்தில் தன் இனத்தவரை விட்டுப் பிரிந்து வந்த பேரெலுமிச்சங்காய் தன் பயணத்திடையே ஒரு பட்டாளமே திரட்டி அதன் தலைவனாகச் செம்மாப்புடன் முன்னேறிற்று. புதிய வரவேற்புகள், புதிய ஆள் வலிமை ஆகியவற்றின் பெருமித மகிழ்ச்சி தோன்றப் பட்டாளத்து வீரர் நிரோட்டத்தில் சுழன்று சுழன்று குதித்தாடிச் சென்றனர்.

மலைப்பாங்கான இடங்கள் தாண்டி, நாட்டுப் பகுதியில் புகும் இடத்தில் சிற்றாற்றின் நடுவே ஒரு பெருந்திடல் உண்டு. அதன் பெரும்பகுதியிலும் மூங்கிற் காடுகளும் முட்புதர்களும் வளர்ந்திருந்தன. ஆனால், அதன் ஒரு பகுதி மணற்பாங்காகவும் புற்பரப்புச் சூழ்ந்ததாகவும் இருந்தது. ஒரு பெரிய படரால மரம் அப்பகுதிக்கு நிழலும் குளிர்ச்சியும் அளித்தது. இனிய பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கி இசை பரப்பின. திடலின் முகட்டில் உள்ள ஒரு பாறை இருபுற நீரோட்டங்களுடனும் கைகலந்து நின்று. திடலின் இப்பகுதிக்குரிய அழகுக்கு அழகு செய்தது.

எலுமிச்சங்காய்ப் பட்டாளமும் இத்திடலையே தமக்குரிய நல்ல காப்பிடமாகக் கொண்டு, மணற் பாங்காயிருந்த இடத்தருகேயுள்ள ஒரு முட்புதரிடைய ஒதுங்கிற்று.

கண்களில்படவில்லை.

சிற்றாற்றுத் திடலில் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் அடிக்கடி வந்து ஆடி விளையாடிப் பொழுது போக்கிச் செல்வதுண்டு, முட்புதரின் மறைவிலிருந்த தேக்கிலை அவர்கள் எலுமிச்சங்காய்ப் படைவீரரும் அவர்களிடம் நீடித்து அச்சங் கொள்ளவில்லை. ஏனெனில், தம்மையும் அறியாமல் அப்படைவீரர்கள் கள்ளங்கபடமற்ற அம் மாணவ மாணவியர் பேச்சுக்களிலும் குறும்பாட்டங்களிலும் ஈடுபட்டு மகிழ்ந்தனர்.

மாணவன் ஒருவன் ஒரு சிறுமியைக் கையில் எடுத்து, ‘என் எலுமிச்சம்பழமே!' என்று கொஞ்சினான். சிறுமி அவன் கன்னத்தைக் கிள்ளவே, அதைக் கண்ட மற்றொரு மாணவன் 'ஏதேது, கடுகு சிறுத்தாலும் காரத்துக்குக் குறைவில்லை' என்றான்.