பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

அப்பாத்துரையம் - 34

இப்படி கொட்ட வேண்டும். காலை முதல் மாலைவரை இந்த வேலையைச் செய்" என்று அவர் கட்டயையிட்டார். 'சரி' என்றான் அரங்கன்.

தலைவர் கண்காண அவன் வேலை தொடங்கினான். உண்மையிலேயே அவன் பெரிய கூடை நிறைய மண் வெட்டினான். ஆனால் காலைநேரம் முழுவதும் அவன் ஒரு கூடையை மெள்ள மெள்ள அசைத்து இழுத்து, நண்பகலில் ஒரு கூடை கொட்டினான். பிற்பகல் முழுவதும் இப்படியே செய்து மாலையில் ஒரு கூடை கொட்டினான். இடைநேரம் முழுவதும் கூடையிலேயே படுத்துக் கொண்டிருந்தான்.

"எத்தனை கூடை கொட்டினாய்?" என்று சட்டநாதர் மாலையில் கேட்டார். "இத்தனை என்று எண்ணிப் பார்க்க வில்லை. காலை முதல் மாலை வரைக் கொட்டினேன்" என்றான்.

ஓவ்வொருநாள் சட்டநாதர் வந்து வேலையைப் பார்ப்பார். அவன் படுத்திருப்பது கண்டு சீறுவார். "ஐயனே, நீர் கூறியபடி கூடை நிரப்பிக் கொட்டுகிறேன். இத்தனை தடவை கொட்ட வேண்டும் என்று கூறினால், விரைவில் கொட்டுவேன். நிரப்பு வதனால் நேரம் ஆகிறது. அதனால் களைத்துத் தூக்க முடியாமல், ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது” என்பான்.

“சரி, காலம் வீணாக்காதே, விரைந்து விரைந்து கொட்டு" என்றார் சட்டநாதர்.

மறுநாள் சட்டநாதரின் வயது சென்ற தாய் குளத்திலுள்ள சிறிதளவு நீரில் சட்டிபானை கழுவிக் கொண்டிருந்தாள். அரங்கன் கூடையை அவள் அருகில் வைத்துக் கொண்டு நின்றான்.“அம்மா, எனக்கு நேரமாகிறது. நான் கொட்டட்டுமா?” என்றான்.

கிழவிக்கு கோபம் வந்தது. “ஆமடா, கொட்டு, என் தலைமேலேயே கொட்டு” என்றாள்.

அவன் அப்படியே தலைமேலே கொட்டிவிட்டான்.

கிழவி விழுந்து எழுந்திருக்க அரும்பாடுபட்டாள். அவள் தலையில் சிறிது காயம் ஏற்பட்டது. முகம் கை, கால் எல்லாம் மண்ணாயிற்று.