பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 3

235

ஹாலந்து நாட்டில் ஒரு வணிகன் வசம் இருந்த பேர்போன யூட்ரெக்ட்மணியே என்று அனைவரும் கருதினர். அது மிகவும் விலையேறியது. ஆயினும், அதை வாங்கப் போதிய அளவு பெருந்தொகை ஊர்வலத்திலும், பொதுக் கூட்டத்திலும் திரண்டிருந்தது.அதைவாங்கும் பொறுப்பையும், வாங்கிப்பாறையில் கட்டும் பொறுப்பையும் கூட்டத்தில் கலந்துகொண்டு

பேரார்வத்துடன் பேசிய ளைஞன் மெக்ளிஸினிடமே விடப்பட்டது.

ஆண்ட்ரு மெக்ளிஸ் மிக இளவயதிலேயே வாணிக முயற்சியை மேற்கொண்டிருந்தவன்.அவ்வகையில் அவன் அடிக்கடி ஹாலந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டம் சென்றதுண்டு. அப்போதெல்லாம் அவன், வாண்டர் மரக்களின் என்ற யூத வாணிகனில்லத்தில் தங்கி இருப்பது வழக்கம். வாண்டர்மாக்ளின் ஆண்ட்ரூவின் சுறுசுறுப்பையும் நல்ல தோற்றத்தையும் கண்டு, அவனிடம் மிகுதி ஈடுபாடுடையவனானான். மனைவியிழந்த மரக்களினும் ஆண்ட்ரூவும் அடிக்கடி ஒருங்கே விடுதி சென்று உணவுண்டு, வீட்டில் இரவு நடுயாமம் வரை புகை குடித்துக் கொண்டே பேசிக்கொண்டிருப்பார்கள்.ஆண்ட்ரூவைப் போலத் தனக்கு ஒரு மகனிருந்தால் எவ்வளவு நலமாயிருக்கும் என்று அச்சமயங்களில் வாண்டர்மாக்ளின் எண்ணுவான்.ஏனென்றால், அவனைப் போன்ற செட்டும் சுறுசுறுப்பும் உடைய இளைஞன் தன் பெருஞ்செல்வத்தைப் பாதுகாப்பதுடன் அதைப் பெருக்கவும் வகை தேடுவான் என்று வாண்டர்மாக்ளின் கருதினான்.

டண்டிப்பகுதியில் உள்ளவர்கள் காலன்பாறைக்காக வாங்க எண்ணிய யூட்ரேக்ட் மணியும் அதனையொத்த புகழ்மிக்க மணிகளும் வரண்டர்மாக்ளினின் மாமணி இல்லத்திலேயே இருந்தன. ஆகவே, ஆண்ட்ரூமக்ளிஸ் ஆம்ஸ்டர்டம் சென்றபோது மீட்டும் நேரே அவனிடமே விருந்தினனானான்.

முன், மெக்ளிஸ் வந்தபோது வாண்டர்மாக்ளின் வீட்டில் இல்லாத ஒரு புது உயிர் இப்போது அங்கே இருந்தது. அதுவே அவன் புதல்வி கதரினா. முன்பெல்லாம் தாயற்ற நிலையில் அவள் பள்ளி இல்லங்களிலேயே தங்கித் தன் படிப்பில் கவனமா யிருந்தாள். இப்போது அவள் படிப்பும் முடிந்துவிட்டது.