சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 3
239
பூட்டப்பட்ட மணி உடனே கணகணவென அடிக்கத் தொடங்கிற்று.மணி சரியாகப் பூட்டப்பட்டது என்பதற்கு அது ஒரு நற்சான்று. அதே சமயம் புயல் வருகிறது என்பதற்கும் அது ஒரு அறிகுறியாய் அமைந்தது. மணியைக் கொண்டு வந்து பூட்டியவர்களுக்கே மணியின் முதல் எச்சரிக்கை பயன்பட்டது. அவர்கள் விரைந்து படகுகளை உதைத்துப் பாறையிலிருந்து புறப்பட்டுக் கரை சேர்ந்தனர்.
மெக்ளிஸின் உள்ளம் இதுவரையில் தன் வேலையில் ல்லை. உடல் மட்டுமே அதில் இயங்கியிருந்தது. வேலை முடிந்ததே அவன் ஒருசிறிதும் காலம் தாழ்த்தாமல், ஆம்ஸ்டர்டாம் சென்றான். மீட்டும் ஒருமுறை அவன் வாண்டர் மாக்ளினின் விருந்தினனானான். ஒன்றின் நினைவில் ஒன்று அழுந்திக்கிடந்த இரு உள்ளங்கள்; அருகருகே வந்துவிட்ட இரு உள்ளங்கள்; அருகருகே வந்துவிட்ட இரு எதிர்மின்சார முனைகள் அதிர்வது போல அதிர்ந்தன.
ரு
மெக்ளிஸ் தன் வீட்டில் வருவதனால், தன் புதல்வியிடம் எத்தகைய மாறுதலாவது உண்டாக்கக்கூடும் என்று வாண்டர் மாக்ளின் எதிர்பார்க்க வில்லை. இருவரும் மனிதர் என்பதையும், இருவரும் இளம்பருவத்தின் பிடியிலிருந்தனர் என்பதையும் அவன் பெரிதாய் எண்ணவில்லை. ஏனென்றால் அவன் மெக்ளிஸினிடம் கொண்ட பற்று; ஆண்டை அடிமையிடம் செல்வன் ஏழையிடம் கொண்ட பற்று; அதில் பாசம் இருக்கலாம்; நேசம் இருக்க முடியாது. எனவே வெவ்வேறு உலகத்தவராகிய அந்த இளைஞ னிடமும் நங்கையிடமும், சமத்துவம் உடையவர்களிடையே எழும் உணர்ச்சிகள் எழமாட்டா என்று அவன் எண்ணினான்.
தன் எண்ணம் தவறு என்பதை வாண்டர் மாக்ளின் விரைவில் உணர்ந்தான். மெக்ளிஸ் அவனிடம், தன் காதலைக் கூறித் திருமணம் செய்து தரும்படியும் கோரினான். அவன் துணிச்சல் கண்டு வாண்டர் மாக்ளினின் உள்ளம் சீறி எழுந்தது. ஆண்ட்ரூ தன் பாசத்தைத் தவறாகப் பயன்படுத்தினான் என்று அவன் உள்நாடிகள் படபடத்தன. ஆனால், அவன் யூதன். வாணிகப் பண்பு அவனிடம் ஊறியிருந்தது. காதலைப் போலவே சீற்றமும் வெறுப்பும் சரிநிகரானவருக்கு இடையே மட்டுந்தான் கொள்ளத்தக்கவை என்று கருதியவன் அவன், ஆகவே அடங்கிய குரலில், ஆனால் கண்டிப்பாகப் பேசினான்.