பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 3

(241

வாடிக்கைக்காரருக்கும் வாணிக நண்பர்களுக்கும் எழுதி, தம் சரக்குகளை அனுப்பும்போது, மேக்ளிஸ் தலைவனாயிருக்கும் எந்தக் கப்பலிலும் அனுப்பவேண்டாம் என்று ஏற்பாடுசெய்தான்.

நம்பிக்கை உட்கதவும்கூட அடைபட்டு விட்டது என்று மெக்ளிஸ் கண்டான். இனி ஆம்ஸ்டர்டாமில் இருந்து பயனில்லை என்று உணர்ந்தும், அவன் அங்கேயே சுற்றித் திரிந்தான். கடலோடிகளிடையே காலத் திட்பத்துக்கும் சுறுசுறுப்புக்கும் பேர் வாங்கியிருந்த அவன், இப்போது தன் ஆடைகள் அழுக்கடைவதைக்கூட அறியாமல் சுற்றித் திரிந்தான்.

கதரினா அனுப்பப்பட்டிருந்த வீட்டை அறிந்த பின்னும், அதைச் சுற்றிச் சுற்றித் திரியமுடிந்ததே தவிர, வேறு பயன் காணமுடியவில்லை. அவள் முகத்தைக் காணவோ அவளைப் பற்றிய செய்தி அறியவோ ஒரு சிறிதும் கூடவில்லை. அவன் கப்பல் மூட்டைகளை ஏற்றியாய்விட்டது. மறுநாள் கப்பலில் ஏறியாக வேண்டும். நம்பிக்கையிழந்தவனாய்த் தன் உயிரைத் தன்னகங் கொண்ட மதில்களை இறுதியாக ஒருமுறை ஏறிட்டுப்பார்த்தான். அவன் முன் ஒரு கல்பொதிந்த தாள் தொப்பென்று விழுந்தது. கல்லுடன் தாள் பட்டுக்கயிற்றினால் கட்டப்பட்டிருந்தது. அதை ஆவலோடு எடுத்து வாசித்தான்.அது கதரினாவின் கைவேலை.அது, அவள் கையெழுத்து என்பதை ஐயமின்றி அறிந்து அவன் நெஞ்சு புது நம்பிக்கையுடன் படபடத்தது. ஆனால், அதில் இரண்டே சொற்கள் கொண்ட தொடர்தான் எழுதப்பட்டிருந்தது. யூட்ரேக்ட்மணி என்பதுதான் அது.

மேக்ளிஸ் ஒரு கணநேரத்தான் விழித்து நின்றான்.மறுகணம் மின்னல்போலக் கதரினாவின் கருத்து அவன் உள்ளத்தில் மின்னிட்டது. ஆம், அந்த மணிக்கு அவனே பதினாயிரம் பொன் கொடுத்ததுண்டு. வாணிகன் கிராஃவ்ட் அதற்குமுன்பே பதினாயிரம் பொன் விலை கூறிக் கேட்டதுண்டு. 'இப்போதும் யாராவது மணியைக் கொண்டுகொடுத்தால் மூச்சுப்பேச்சின்றிப் பத்தாயிரம் பொன்னைக் கொடுப்பான்.யார் கொடுத்தது? எப்படி வந்தது? என்று கூறமாட்டான்.' இந்த எண்ணம் தனக்கு ஏன்வரவில்லைஎன்று வியப்புற்றான்.

ஆனால்...ஆனால்... அவன் மனம் இன்னொரு வகையில் திடுக்கிட்டது. கொலைக்குற்றம் ஒரு பெரிய குற்றம் அல்ல. அதில்