சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 3
243
அவள் மென் கைக்காக முன் கை நீட்டிக் கோரிக்கையிட்டவர் பலர் இருந்தனர். அவள் தந்தையின் குறிப்பறிந்து, கைகள் இன்னும் பல முன் வந்தன.
மெக்ளிஸைவிடப் பணத்திலும் பதவியிலும் உயர்ந்த இடத்தைத்தான் வாண்டர்மாக்ளின் விரும்பினான். ஆனால், அவை கிடைக்குமிடத்தில், மெக்ளிஸின் குண நலனையும் அவன் எதிர்பார்த்தான். இது பொன்னால் செய்த பூவில் மணத்தையும் எதிர்பார்ப்பது போலத்தான் இருந்தது. ஆகவே, அவன் எளிதாக எத்தகைய முடிவுக்கும் வராமல் தயங்கினான். இதற்குள் கதரினா அவனிடம் வந்தாள். "அப்பா, நீங்கள்தான் எனக்குத் தாயும் தந்தையும்! உங்கள் மனம்போலத்தான் நான் எல்லாச் செயல்களிலும் நடக்கப்போகிறேன். ஆனால், என் மனம் உங்களுக்குத் தெரியும். பணம் தவிர மற்ற வகைகளில் மெக்ளிஸிடம் உங்களுக்குப் பற்றும் மதிப்பும் உண்டு என்பதையும் நான் அறிவேன். இந்நிலையில் நீங்கள் அவருக்குக் கொடுத்த வாக்கை மறந்துவிடாதிருக்கக் கோருகுகிறேன். "பன்னிரண்டாயிரம் பொன்னைக்காட்டு, கதரினாவை நீ அடைவாய்' என்பதே உங்கள் கடைசி வாக்கு" என்றாள்.
உ
உ
வாண்டர் மாக்ளின் முகம் சற்றுக் கடுமையாயிற்று. ஆனால், மகள் சொல்லுக்கு அவன் சிறிது மதிப்புக் கொடுத்தான். அவன் செல்வத்தின் பாதுகாப்புக்கான ஒரு மகனோ, இன்னொரு மகளோ இருந்திருந்தால், அந்த மதிப்புக்கூடக் கொடுத்திருக்க மாட்டான். 'நீ கேட்பதனால், அவனுக்கு இரண்டு ஆண்டு தவணை கொடுக்கிறேன். அதற்குள் குறிப்பிட்ட தொகையுடன் வராவிட்டால், நீ அதற்குமேல் என் விருப்பப்படிதான் நடக்க வேண்டி வரும்.என்றான்.
கதரினா தலை குனிந்தாள். தந்தை சென்றதும், அவள் கண்கள் மேலெழுந்தன. இறைவனை நோக்கி யூட்ரெக்ட்மணி, யூண்ரெக்டமணி என்று முணு முணுத்துக் கொண்டாள்.
காலன்பாறை இப்போது காலன் பாறையாயில்லை, எல்லாராலும் அது மணிப்பாறை என்றே வழங்கப்பட்டு வந்தது. மணி பெரியதாக இருந்தாலும் அது புயலின் கருவிலுள்ள சின்னஞ்சிறு காற்றதிர்ச்சியிலும் கணகணவென்றொலித்துக்