இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மோதல் தமிழினத்துள் முற்றும் தவிர்த்திடுக!
இந்தத் தலைமுறையில்
ஏதோ ஒருவழியில்
முந்தைத் தமிழினத்தை
முன்னேற்ற வேண்டும், நாம்
சொந்தத் திருமொழியும்
தொன்மைப் பெருநாடும்
சிந்துப் பகைவரினால்
சீரழியும் என்பதனால் !
மோதல் தமிழினத்துள்
முற்றும் தவிர்த்திடுக!
காதல் தமிழ்மொழிமேல் கற்றவர்கள் கொண்டிடுக! சாதி யொழிப்பும் தூய தமிழ் வழக்கும் வேதியர் கொள்கையினை
வேரறுக்கும் என்பதனால்!
-பாவலரேறு பெருஞ்சித்திரனார்
கனிச்சாறு-2
உதவு
தமிழ்மண் பதிப்பகம்
2. சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர்.
6160T600601 - 600 017.
தொலைபேசி : 044-24339030
செல்பேசி
- 9444410654