சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 3
11
சட்டநாதருக்குச் சீற்றமும் எரிச்சலும் பொங்கி வந்தன.அவர் தரிசு நிலத்துக்குப் போய் உழுத வகையையும் பார்த்தார். “வயல் முழுவதும் சுற்றி உழவல்லவா சொன்னேன்?" என்று அவர் அதட்டினார்.
“ஏன், சொன்னபடி நான் செய்யவில்லையா? வயலைச் சுற்றியாயிற்று. உழுதாயிற்று” என்று கூறி அவன் சிரித்தான்.
"இந்தச் சனியனை ஏன் கட்டிக் கொண்டு அழவேண்டும். இவனை நீக்கிவிடுங்கள்" என்றாள் மனைவி.
66
‘அவனை நானாக நீக்கினால் என் மூக்கை அரிந்து கொடுக்க வேண்டும்.அவனாகப்போனால் அவன் மூக்கை அரிந்து தர வேண்டும். அவனாகப் போகும்படிதான் இனிச்செய்ய வேண்டும்” என்று,
அவர் மறுமொழி தந்தார்.
சட்டநாதரின் தாய் தலையில் பட்ட காயத்தால் இறந்தாள். சட்டநாதர் தாம் அரங்கனை அமர்த்திக் கொண்ட நாளை எண்ணி வருந்தினார். தாயை அடக்கம் செய்துவிட்டு அவர் வீட்டில் வந்து படுத்தார். ஆனால் அவரால் கண் மூட முடியவில்லை. அடுத்த வீட்டுச் சிறுவர் சிறுமியர் ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர்.
சட்டநாதர் அரங்கனை அழைத்தார் எனக்கு அமைதி தேவை அந்தப் பிள்ளைகளை சற்று ஓய்ந்திருக்கச்சொல் என்றார். அரங்கன் “அப்படியே" என்று கூறிச் சென்றான்.
ஆனால் அவன் பிள்ளைகளிடம் அப்படிச் சொல்லவில்லை. 'உங்களை என் தலைவர் உரத்துப் பாடச் சொன்னார்' என்றான். சிறிது நேரத்துக்குள் அவன் திரும்பி வந்தான். "பாடக் கூடாது என்று நான் சொன்னேன். அவர்கள் இன்னும் உரத்துப் பாடத் தொடங்கி விட்டார்கள்” என்றான்.
“அப்படியா செய்தி! பாடலை நிறுத்து. அல்லது நான்வந்து அவர்கள் மண்டையை உடைத்துவிடுவதாகச் சொல்” என்றார்.
அவன் சென்றான். ஒன்றுமே பேசாமல் சிறிதுநேரம் அவர்களைப் பார்த்துக் கொண்டு நின்றுவிட்டு, ஒரு நீண்ட கழி எடுத்து ஒன்றிரண்டு பிள்ளைகள் மண்டை உடையும்படி