2. கோமாரியும் சோமாரியும்
நாலூருக்கும் ஐந்தூருக்கும் நடுவே பெருங்காடு ஒன்று இருந்தது. இந்தக் காட்டில் திருடர் அச்சம் மிகுதி. இத் திருடர் கொலை செய்வதில்லை. வழிப்போக்கரைத் துன்புறுத்து வதுமில்லை. திருட்டையோ திருடரையோ யாரும் கண்டதும் கிடையாது. ஆயினும் காடு கடப்பதற்குள் எப்படியோ வழிப்போக்கர் கைப்பொருள்கள் காணாமற் போயின. சிலர் பெட்டிகளில் பணத்தைப் பூட்டிப் பெட்டியை ஒருநாள் ஒரு கூட்டத்துடனும், திறவுகோலை மற்றொருநாள் மற்றொரு கூட்டத்துடனும், அனுப்பி வைத்தனர்.பெட்டியும் பாதுகாப்பாகப் போய்ச் சேர்ந்தது. திறவுகோலும் பாதுகாப்பாகப் போய்ச் சேர்ந்தது. ஆனால் காடு கடந்து பெட்டியைத் திறந்து பார்த்தபோது உள்ளே பணத்தின் தடத்தையே காணவில்லை!
திருடரின் மாயத் திறம் கண்டு எல்லாரும் வியப்படைந்தனர்! மாயத் திருட்டுத் திடுமென மாயமாய் நின்று விட்டது. காட்டு வழியே சென்றவர்கள் கொண்டு சென்ற பொருள்கள் இடையே மறையவில்லை. காடு கடந்தபின் அவை முன் இருந்தபடியே இருந்தன.
மாயத்திருட்டு எப்படி மாயமாக மறைந்தது என்றோ, திடீரெனக்காடு எப்படித்திருந்திற்று என்றோ யாரும் அறியவில்லை.
காட்டின் திருட்டுக்கு இரண்டே இரண்டு திருட்டுக் குடும்பங்கள் தான் காரணம். இருவரும் நாலூரின் எல்லையில் வாழ்ந்தவர்களே; வழிவழி மரபாகத் திருடர்களாய் இருந்ததனால், ஒரு குடும்பத்துடன் போட்டியிட்டு அடுத்த குடும்பம் தன் மாயத் திருட்டு திறனை வளர்த்திருந்தது.
இரண்டு குடும்பத்திலும் இருவரே மீந்திருந்தனர். முதற் குடும்பத்தில் மீந்தவன் கோமாரி. அவனே மூத்தவன். அடுத்த குடும்பத்தில் மீந்தவன் சோமாரி. அவன் கோமாரிக்குச் சற்று