18
அப்பாத்துரையம் - 34
'நான் உன்னையல்லவா இப்படிக் கேட்க நினைத்தேன், தம்பி!” என்றான் கோமாரி.
‘எனக்கு இந்த வெள்ளி பொன் வேண்டாம், இது என்ன என்று தெரிந்தால் போதும்!' என்றான் கோமாரி.
‘எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.திருட்டில் எனக்கு ஈடுசோடு நீதான். உனக்கு ஈடுசோடு நான்தான். ஆனால் இந்தச் சிப்பத்தைப் பெரியவர் கொண்டு போவதைப் பார்த்தால், இது என்னவோ விலைமதிப்பற்ற பொருளாகத்தான் இருக்க வேண்டு மென்று நினைக்கிறேன். இம்மதிப்பை அறியும் வகையில் நாம் இருவரும் ஒன்றுதான். இதுவரை எவ்வளவோ செல்வங்களை ஏழைகளிடமிருந்தும் செல்வர்களிடமிருந்தும் பறித்தோம். இந்த ஒரு தடவை அந்தப் பெரியவரிடமே சென்று இந்த இரண்டு செல்வங்களையும் திருப்பிக் கொடுத்து, இவற்றின் மதிப்பை அறிந்தால் என்ன?' என்றான் கோமாரி.
'இப்போது நீ சொன்னது ஆயிரத்தில் ஒன்று, அப்படியே செய்வோம். உன்னோடு நானும் வருகிறேன்' என்றான்.
புலவர் இன்னும் சிப்பத்தை அவிழ்த்துப் பார்க்கவில்லை. காட்டில் அலைந்த அலுப்பால், அவர் ஐந்தூர் எல்லையில் உள்ள ஒரு விடுதியில் உண்டு, களைப்பாறிக் கண்முடியிருந்தார். திருக்குறட் செல்வமிழந்த இரண்டு சிப்பங்களும் அருகே கிடந்தன.
அவர் அரியாமலே சிப்பங்கள் மீட்டும் அவிழ்க்கப்பட்டன. திருக்குறள் செல்வங்கள் முன்போலவே சிப்பங்களில் பெற்றன. சிப்பங்கள் முன்போலவே கட்டப்பட்டு விட்டன.
டம்
தூங்குகின்ற புலவரின் இரு கால்களையும் ஆளுக் கொன்றாக கோமாரியும் சோமாரியும் பிடித்துக்கொண்டனர்.
நாயோ பெருச்சாளியோ காலைக் கவ்விற்று என்று கருதிப் புலவர் திடுமென எழுந்தார்.
ருவரும் காலடியில் விழுந்து வணங்கினர். தம் செப்பைகளில் தாமே அடித்துக் கொண்டு, 'மன்னிக்க வேண்டும். பெரியவரே! மன்னிக்க வேண்டும்! நாங்கள் தங்களுக்குப் பெரும் பிழை செய்துவிட்டோம்' என்றார்கள்.