பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 3

19

என்ன செய்தி! எனக்கு ஒன்றும் விளங்க வில்லையே!' என்று கேட்டார் புலவர்.

திருக்குறட் செல்வங்கள் நாட்டிலே பறிபோன செய்தி கேட்டு முதலில் பதறினார் புலவர். ஆனால் அவை மீட்டும் தம்மிடமே சேர்ப்பிக்கப்பட்ட செய்தி கேட்டு வியப்படைந்தார். மகிழ்ச்சியும் கொண்டார். சிப்பங்களைத் திறந்து பார்த்தார். திருக்குறட் செல்வங்கள் வைத்தபடி அப்படியே இருந்தன.

வள்ளுவருடைய திருக்குறளின் பெருமை எப்படியோ திருடர்கள் உள்ளங்களிலும் புகுந்து வேலை செய்திருக்கிறது என்று கண்டு அவர் எல்லையிலா மகிழ்வடைந்தார்.

'உங்களுக்கு இப்போது என்ன வேண்டும்?' என்று அவர்

கேட்டார்.

'பெரியவரே, நாங்கள் படிப்பில்லாதவர்கள். நாங்கள் வாழ்நாள் முழுதும் திருட்டிலேயே கழித்து விட்டோம். அதுவே எங்கள் குடும்பங்களின் வழிவழி மரபுத் தொழிலாய் விட்டது.

னால், இந்த ஏடுகளைப் பொன்போல நீங்கள் எடுத்துச் செல்கிறீர்களென்று காண்கிறோம். இதில் அப்படி என்ன இருக்கிறது? இதை எங்களுக்குச் சொல்ல வேண்டும்' என்றார்கள் இருவரும்.

வள்ளுவர்பிரான் திருவருளின் திருவிளையாடலை எண்ணிப் புலவர் மீண்டும் வியப்புற்றார். அதே சமயம் அவர் உள்ளம் இன்னதென்றறியா மகிழ்ச்சியிலும் ஆழ்ந்தது.

'பொய், வஞ்சகம், திருட்டு, கள், கொலை ஆகியவை மனித வாழ்க்கையைக் கெடுப்பவை. அவற்றுக்கு ஆளானவர்களுக்கு மட்டுமல்ல, இழைப்பவர்களுக்கும் பெருந்தீங்கு பயப்பவை. அன்பும் அறமும் அருளும் குடும்பத்துக்கும் மரபுக்கும் இன்பம் தருபவை. இந்தப் படிப்பினைகளை விளக்கும் திருநூல் இது. நம் தமிழர் மரபு வாழ, வள்ளுவர் பிரான் வகுத்தளித்த நெறிமுறை இத்தகையது’ என்றார் புலவர்.

கோமாரியும் சோமாரியும் மீண்டும் மீண்டும் விழுந்து வணங்கினர். 'அண்ணலே! கள், கொலை இரண்டும் நாங்கள் அறியாதவை. ஆனால், மற்ற மூன்றும் எங்கள் வாழ்க்கையாகி