பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

அப்பாத்துரையம் - 34

விட்டதே! என்ன செய்வோம்!' என்றார்கள். புலவர் ஆழ்ந்து சிந்தித்தார்.

'நீங்கள் திருட்டை மட்டும் விட்டுவிடுங்கள். வள்ளுவர் பெருமானே பின் உங்களுக்கு வழிகாட்டுவார்' என்றார்.

'இந்தக் காடு எங்களுக்கு இந்தத் தொழிலையே நினைவூட்டிக் கொண்டிருக்கும். ஆகவே நாங்கள் தொலையூர் சென்று திருந்திய வாழ்வு வாழ்கிறோம்' என்று கூறிக் கோமாரியும் சோமாரியும் புலவரிடம் வணங்கி நன்றி தெரிவித்த வண்ணம் விடைபெற்றுச் சென்றனர்.

நாலூர் ஐந்தூர் இடைப்பட்ட காட்டில் திடுமென மாயத் திருட்டு நின்றுவிட்ட வகை இதுவே.

ஐந்தூர்க் கோமான் அறிவனும் அவன் இருமைந்தர்களும் புலவர் கூறியதைக் கேட்டு, திருக்குறளை முன்னிலும் பன்மடங்கு பூசித்தனர்.

ஆறூர் நாலூரிலிருந்து நெடுந்தொலைவிலிருந்து. கோமாரியும் சோமாரியும் அங்கே சென்று குடியேறினர். திருட்டுத் தொழிலை அவர்கள் அறவே கைவிட்டுவிட்டனர். வேறு வேலை தேடினர். ஆனால் வேறு வேலை கிடைப்பது அரிதாயிருந்தது. ஆறூர் வளமான ஊரானாலும் சிறிய ஊர், அங்கே அவரவர் வேலையை அவரவர் செய்தனர்.வேறு ஆட்களைச் சம்பளத்துக்குச் சேர்த்துக் கொள்பவர் அங்கே யாரும் இல்லை.

ஊர்க் கோடியிலுள்ள ஒரு பெரிய தோட்ட வீட்டுக்காரன் இருவர்களையும் ஏற இறங்கப் பார்த்தான். பின் இருவருக்குமே வேலை தருவதாக வாக்களித்தான்.

'உங்களுக்கு வேலை மிகுதியில்லை. ஆனால், கொடுத்த வேலையைச் சரிவரத் திருத்தமாகச் செய்துவிட்டால். வாழ்க்கைக்குப் போதிய ஊதியம் தருகிறேன். என் தோட்டத்தில் ஒரு பன்னீர் மரம் இருக்கிறது. அருகிலுள்ள குளத்திலிருந்து அதற்கு நீர் வார்க்க வேண்டும். மரத்தடியில் கொஞ்சம் நீர்கட்டி நிற்கும் வரையில் நீர் ஊற்றவேண்டும். இதை உங்களில் யாராவது ஓருவன் செய்யலாம். மற்றொருவன் என்னிடமிருக்கும் எருதைப் பக்குவமாக இட்டுச் சென்று புல்வெளிகளில் மேய விட வேண்டும். எருது ஓடிவிடாமலும், கம்பங் கொல்லைகளிலோ