22
II.
அப்பாத்துரையம் - 34
தென்பட்டன. எருதை மரத்தடியில் கொண்டு அவிழ்த்துப் புல் மேயவிட்டான். அத்துடன் கவலையில்லாமல் மரத்தடியில் வந்து படுக்க எண்ணி அதை நெருங்கினான்.
ஆனால், எருது புல்வெளியை விட்டு அப்பால் ஓடிற்று. அவன் அதன்பின் ஓடினான். அது அவன் கைப்பிடிக்கு அகப்படாமல், கம்பங் கொல்லை, நெல் வயல், கருப்பந்தோட்டம் எங்கும் அவனை இழுத்தடித்தது. எங்கே அது வயல்களிலும் தோட்டங்களிலும் புகுந்து மேய்ந்து, அவன் பிழைப்பைக் கெடுத்துவிடுமோ என்று அவன் அஞ்சி அஞ்சி நடுங்கினான். நடுக்கத்துடன் அது போகுமிடமெல்லாம் தொடர்ந்தான். இந்நிலையில் நண்பகல் உணவுண்ணக்கூட அவனுக்கு நேரமில்லாது போயிற்று. காலையில் பிடியிலிருந்து நழுவிய எருது மாலைவரை வயல் காடுகளிலும் ஊர்ப்புறங்களிலும் சுற்றித் திரிந்தது. பொழுது சாயும் நேரத்தில்தான் எப்படியோ அது பிடிக்கு எட்டிற்று.
6
செத்தோம், பிழைத்தோம்' என்று அவன் எருதைத் தொழுவில் கட்டிவிட்டு மீண்டான்.
'கோமாரி மிகவும் கெட்டிக்காரன். நல்ல வேலை பார்த்துத் தான் தேர்ந்தெடுத்துக் கொண்டான். எனக்கு இந்தப் பேயாட்ட வேலையைத் தள்ளிவிட்டான். இன்றெல்லாம் அவன் நன்றாக ஓய்வெடுத்தக் கொண்டிருப்பான். ஆயினும் வரட்டும், நாளை எப்படியாவது நயமாகப் பேசி இந்தப் பேய் வேலையை அவன்மீது சுமத்திவிடுவோம். நாளை நாம் நன்றாகப் படுத்து உறங்கலாம்!’ என்று அவன் திட்டமிட்டுக் கொண்டே நடந்தான்.
கோமாரி கால் நீட்டிக் கைபரப்பிப் படுத்திருப்பது கண்டதே, சோமாரிக்கு அவன்மீது உள்ளூரக் கோபம் வந்தது. ஆனால் அவன் அதை வெளிக்குக் காட்டிக் கொள்ளவில்லை.
சோமாரி கைவீசிக் கால்பரப்பி மெல்லநடந்து வருவதைக் கண்டதே, கோமாரிக்கும் அவன் மீது உள்ளூரப் புழுக்கம் எழுந்தது. ஆனால், அவனும் அதை வெளிப்படையாகக் காட்டிக்
கொள்ளவில்லை.
இருவரும் திறமையாக நடித்தனர். ஒருவருடன் ஒருவர் நட்புப் பாசத்துடன் அளவளாவினர். எப்படியாவது