பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 3

25

சோமாரி கண்ட இன்பத்துக்கு வட்டியும் முதலும் சேர்த்து அவன் இன்பங் கண்டான் என்று சொல்ல வேண்டியதில்லை. பொழுது சாயும்போதுதான் அவன் ஒரு கையால் எருதைப்பற்றித் தொழுவில் மாட்டிவிட்டு, ஒரு கையால் கட்டில் படுக்கையைப் பற்றிச் சுமந்தவண்ணம் தோட்டப்புரைக்கு வந்தான்.

சோமாரியும் வெயிலில் நின்று மாலைவரை உழைத்து விட்டு மேலும் கீழும் மூச்சுவாங்க அந்த இடத்துக்கு வந்தான். இப்போது இருவருக்குமிடையே பேச்சுகளுக்குத் தேவையில்லை. கண்ணும் கண்ணும் பார்த்தவுடன் ஒருவர் உண்மையான நிலை மற்றவருக்கு முற்றிலும் புரிந்துவிட்டது. அப்படியே வாய்திறவாமல் உள்ளத்துடன் உள்ளத்தைப் பேசவிட்டு அவர்கள் நெடுநேரம் சாய்ந்திருந்தனர்.

சோமாரி தனக்குள்ளாகவே பேசிக் கொண்டான். ஆனால், அது உரத்த பேச்சு. கோமாரிக்கு அது கேட்டது.

'அந்தப் பன்னீர் மரத்தடி எவ்வளவு தண்ணீர் கொள்ளுகிறது. வள்ளுவர் பெருமானே! அதற்குக் கீழே தண்ணீர் விழ ஒரு குளமே தான் இருக்குமோ!' என்றான்.

தம்பியின் பேச்சு அண்ணனைச் சிந்திக்க வைத்தது.

சிறிது நேரம் அவனும் பேசாமல் இருந்தான். பின் அவனும் தனக்குள்ளாகவே, ஆனால் உரக்கப் பேசினான்.

'குளம் இருந்தாலும் இருக்கலாம், ஆயிரம் குடம் இருந்தாலும் இருக்கலாம்!' என்றான்.

சிறிதுநேரத்தில் சோமாரி வாய்திறந்தான்.

‘பன்னீர் மரத்தடியில் குடமா? அப்படியானால்..'

‘அதில் புதையல் இருக்கலாம் என்று நினைக்கிறாயா?'

‘ஆம், நாளை கிளறிப் பார்க்கலாம்!’.

'நாளை என்ன? இப்போதே போவோம்!'

இரண்டு உள்ளங்களில் உருவான கருத்து உடனே செயற்படுத்தப் பட்டது. அப்போது முன்னிரவு கழிந்துவிட்டது. இருவரும் கடப்பாறை மண்வெட்டியுடன் புறப்பட்டனர்.