பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

II.

அப்பாத்துரையம் - 34

அருகே கிடந்த இரண்டாவது மிதியடியை விடுவானே னென்று அவன் அதையும் எடுத்துக் கொண்டான்.

சோமாரி முதல் மிதியடியுடன் விரைந்து திரும்பினான். ஆனால் எருதையே காணாமல் திகைத்தான்.

இரண்டாவது மிதியுடியுடன் காணவில்லை. ஆகவே ஏமாற்றியது வேறு யாருமல்ல, கோமாரியே என்று உணர்ந்து கொண்டான்.

புதையல் போன இடம் தெரிந்தபின், அவன் கவலை அகன்றது. அவன் கோமாரியைத் தாண்டிச் செல்ல விரைந்தான். இவ்வகையில் அவன் வெற்றி கண்டான். ஏனெனில் கோமாரிக்கு முன்பே அவன் நாலூரை அடைந்து, கோமாரியின் வீட்டு வெளி வாயில் கதவின் பின்னே ஒளிந்து நின்றான்.

கோமாரி புகுமுன்பே அவன் கோமாரியின் எதிரே சென்று அவனை வரவேற்றான்.

‘அண்ணேன்! பாதுகாப்பாக வந்து சேர்ந்து விட்டாயா? சரி.உனக்காகவும் என் புதையலுக்காகவும் தான் காத்திருக்கிறேன். உள்ளே போய்ப் பங்கு போட்டுக் கொள்வோமா?' என்றான்.

'சரி' என்றான் கோமாரி. தனக்கு ஈடுசோடு சோமாரி தான் என்று கண்டபின், அவன் வேறு வழி காண வில்லை!

ஆளுக்கொன்றாகத் தங்கக் காசுகள் இரண்டிரண்டாக எடுத்துப் பங்கிடப்பட்டன. ஆனால், முடிவில் ஓர் ஒற்றைக்காசு வந்தது. அதைப் பங்கிட முடியாமல் அவர்கள் திண்டாடினர்.

தை வெள்ளியாக மாற்றிப் பங்கிட்டுக் கொள்வோம்' என்றான் கோமாரி.

'சரி, ஆனால் அதுவரையும் அதை யார் வைத்துக் கொள்வது?' என்று கேட்டான் சோமாரி.

'ஏன், நான் தான்' என்றான் கோமாரி.

66

“அது எப்படி! நான் தான் வைத்துக் கொள்வேன்" என்றான் சோமாரி.

‘என் பொன் மிதியடி ஒன்று உன்னிடம் இருக்கிறது.ஆகவே, அதற்கீடாகப் பொன் என்னிடம் இருக்கட்டும்' கோமாரி

என்றான்