பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

அப்பாத்துரையம் - 34

சோமாரி அவனை அடிக்கடி கல்லிலும் முள்ளிலும் போட்டு இழுத்தான். உடலெல்லாம் புண்பட்டுக் குருதியாயிற்று அப்போதும் அவன் வாயாடவில்லை.

ஊர் வெளிக்காடு சென்றபின், சோமாரி ஒரு மரத்தடியில் நின்றான்.

உடலை எரியூட்ட, தீப்பெட்டி இல்லாத குறையை அவன் அப்போது தான் உணர்ந்தான்.

தீப்பெட்டி எடுக்கத் திரும்பி வருவதென்றால், அதற்குள் பிணமாக நடித்த கோமாரி ஓடிவிடுவான். ஆகவே, போகவும் வழியில்லாமல், காரியம் முடிக்கவும் வகையில்லாமல் அவன் விழித்தான்.

பொழுது சாயும் நேரமாயிற்று. தொலைவில் ஆளரவம் கேட்டது. அப்போதும் கோமாரியைவிட மனமில்லாமல், அவன் அவன் உடலை வரிந்துகட்டி, காலில் கயிறிட்டுத் தலைகீழாகப் பிடித்துக் கொண்டு மரத்தில் ஏறி, உடலைக் கிளையில் தொங்கவிட்டான்.

அத் திசையில் வந்தவர்கள் ஒரு புதிய திருட்டுக் குழுவினர். மரத்தில் பிணம் தொங்குவது கண்ட அவர்கள் மகிழ்ச்சி யடைந்தனர். ஏனெனில், பிணம் எதிர்ப்பட்டால், அது நல்ல குறி என்று அவர்கள் கருதினார்கள்.

போகும்போதே ஒருவன் அதுபற்றிப் பேசினான்.

'அண்ணேன்! இந்தப் பிணம் நமக்கு நல்ல எதிர்ப்பாயிற்று. நாம் இனி வெற்றியடைவது உறுதி. அப்படி வெற்றியுடன் திரும்பும்போது, இந்தப் பிணத்துக்கு நம் நன்றியைத் தரிவிப்போம். அதை அடக்கம் செய்வோம்' என்றான். எல்லாரும் சரி என்றனர்.

அவர்கள் திரும்பி வரும்வரை, சோமாரி மரத்திலேயே இருந்தான்.

கோமாரியும் பிணம்போல இரவு முழுதும் தலை கீழாகத் தாங்கினான்.

அவன் வேதனை பெரிதாகத்தான் இருந்தது. ஆனால் அப்போதும் நடிப்பை விட்டுவிட அவன் எண்ணவில்லை.