பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 3

33

சோமாரிக்குச் சில்லறையைக் கொடுத்து விடவும் அவன் எண்ணவில்லை.

திருடர் திரும்பி வந்தனர். அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடிற்று. அவர்கள் சுமைகள் வெற்றியைத் தெரிவித்தன.

சுமையை இறக்கி வைத்தபின், அடக்கம் செய்ய அவர்கள் ஏற்பாடுகள் தொடங்கினர். தீ முட்டப்பட்டது. கோமாரியின் உடல் கட்டப்பட்ட கயிற்றை அறுத்து, அவனை அவர்கள் தீயருகில் கொண்டு போயினர்.

கோமாரி 'கோ' என்று கதறினான்.

அதற்கே காத்திருந்த சோமாரியும் 'சோ' என்று கூவினான்.

திருடர் பேய் என நடுநடுங்கி மூலைக்கொருவராக ஓடினர். கோமாரியும் சோமாரியும் திருடர் கொள்ளைப் பொருளையும் கைக்கொண்டு வீடு சென்றனர்.

'திருந்திய திருடர் செயல் இதுதானா!' என்ற குரல் கேட்டு இருவரும் திடுக்கிட்டனர்.

அவர்களுக்குத் திருக்குறளைப் போதித்த புலமைப் பெரியார் புன்முறுவலுடன் அவர்கள் முன் நின்றார்.

அவர்களிருவரும் எல்லாச் செல்வத்தையும் புலவர் காலடியில் வைத்து வணங்கினர்.

'அண்ணலே! நாங்கள் திருட எண்ணியதில்லை. அந்த தொழிலை விட்டுவிட்டோம். ஆனாலும் ஒருவருக்கொருவர் பொய் பேசினோம். தாங்கள் எடுத்த புதையலுக்காக ஒருவரை ஒருவர் ஏமாற்றத் திட்டமிட்டோம். அதன் மூலம் நாங்கள் கேளாமலே இன்னொரு திருட்டுக் குழுவின் கொள்ளைப் பொருளும் எங்கள் கையில் சிக்கியது.

'இப்போது எல்லாவற்றையும் உங்களிடம் ஒப்படைத்து விட்டோம். இனி ஒருவருக்கொருவர் பொய்யுங் கூறமாட்டோம்; ஏமாற்றவும் மாட்டோம்!' என்றனர்.

உங்கள் பொருளை நான் ஐந்தூர்க் கோமான் அறிவரிடமே கொடுத்து, வள்ளுவர் பல்கலைக்கழகம், வள்ளுவர்