பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

அப்பாத்துரையம் - 34

மருந்தகம், வள்ளுவர் காப்பகம், வள்ளுவர் திருந்தகங்கள் நடத்தச் சொல்கிறேன். ஆனால், நீங்கள் இனிமேல் திருடாமல், பொய் சொல்லாமல், ஏமாற்றாமல் இருந்தால் மட்டும்போதாது. உலகுக்கெல்லாம் உழைக்க வேண்டும். உயிர்களிட மெல்லாம் அன்பு செய்ய வேண்டும். எவருக்கும் துன்பம் செய்யாதிருப்ப துடன் நில்லாமல். துன்பம் வராமல் காக்க வேண்டும். இன்பம் பெருக்க வகை காண வேண்டும். அதுதான் வள்ளுவர் வழிநின்று திருந்தும் வழி!' என்றார்.

'நாங்கள் இனி அந்த அரும்பணி நிற்போம்' என்றனர். இருவரும்!

புலவர்- கோமாரி, சோமாரி ஆகிய இருவரையும் கோமான் அறிவனிடம் இட்டுச் சென்றனர். அவர்கள் திருத்தம் பற்றிய சுவைமிக்க கதையையும் கூறினர்.

திருட்டின் திறங்களை எல்லாம் அறிந்து அப்போது திருந்திய வாழ்வு காண விரும்புபவர்கள் இவர்கள். திருட்டைத் தடுக்கும் காவல் வேலைக்கு இவர்களையே அமர்த்தி விடுகிறேன். அதற்கு இவர்களைவிடச் சிறந்த தகுதியுடைவர் கிடையாது' என்றான் கோமான்.

புலவர் - இக்கருத்தைப் பாராட்டினார்.

கோமாரி நகரையும் நாட்டையும், சோமாரி அவற்றை அடுத்திருந்த காட்டையும் காவல்செய்யும் பொறுப்பை ஏற்றனர்.

ஐந்தூர் நாலூர் மட்டிலுமன்றிச் சுற்றுப்புறங்களிலேயே திருட்டும் கொலையும், பொய்யும் புலையும் அகன்றன. கோமாரி, சோமாரி ஆகியவர் திருத்தம் உலகின் திருத்தமாகப் பரந்தது.

கோமாரி, சோமாரியின் கதைகளை மட்டும் மக்கள் மறக்கவில்லை! அது எல்லாரையும் நல்வழிப்படுத்தியதுடன், எல்லாருக்கும் இன்பமும் அளித்தது.