பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3. சின்னத்தம்பி

சிங்கம்பட்டி என்ற ஓர் ஊரில் இரண்டு உழவர் இருந்தனர். ஒருவர் பெயர் பெரிய தம்பி. மற்றவன் பெயர் சின்னத் தம்பி பெயருக்கேற்றபடியே பெரிய தம்பிக்குப் பெருஞ் செல்வம் இருந்தது. ஐந்து சோடு மாடுகளும் மிகுந்த நிலபுலங்களும் மாடி வீடுகளும் அவனுக்கு இருந்தன. ஆனால், சின்னத்தம்பி ஏழை. அவனிடம் ஒரு சோடு மாடுகளே இருந்தன. ஒரு சிறு நிலமும் ஒரு குச்சு வீடும் அவன் வாழ்க்கைக்கே பற்றுவனவாய் இருந்தன.

உழவுக் காலங்களில் சின்னத் தம்பி தன் ஒரு சோடு மாடுகளுடன் வாரத்தில் ஐந்து நாட்கள் பெரிய தம்பியின் நிலத்தில் சென்று உழுவது வழக்கம். இதற்கீடாகப் பெரிய தம்பியும் ஒரு நாள் தன் ஐந்து சோடு மாடுகளுடன் சின்னத் தம்பியின் நிலத்தில் வந்து உழுவான். சிற்றூர்களிலுள்ள இந்தப் பழமையான ஏற்பாடு இருவருக்கும் வசதியாகவே இருந்தது.

ஐந்து சோடு மாடுகளுக்கு உரியவனாய் இருப்பதே பெரு மதிப்பு என்று சின்னத் தம்பி கருதினான். அந்த நாளை எண்ணி மனப்பால் குடித்தான். அதுவே அவன் கனவாய் இருந்தது. ஆகவே, தன் ஒரு சோடு மாடுகளுடன் பெரிய தம்பியின் ஐந்து சோடு மாடுகளும் தன் நிலத்தில் வந்து உழும் நாளில் அவன் எல்லையிலா மகிழ்வு கொண்டான். அந்த ஒரு நாளாவது ஆறு சோடுகளும் தன்னுடையவை என்று கூறிக் கொள்ள அவன் விரும்பினான். இந்த ஆவலை அவனால் அடக்க முடியவில்லை. போவார் வருவாரிடமெல்லாம் பெருமையுடன் சோடிகளையும் சுட்டிக்காட்டினான். 'இதோ பாருங்கள், இந்த அழகிய மாடுகளை! இந்த ஆறு சோடிகளும் என்னுடையவை தான்! எப்படி, என்னுடைய செல்வங்கள்! என்று பெருமிதத் துடன் பேசினான்.

ஆறு

தன் மாடுகளையும் சேர்த்துச் சின்னத்தம்பி உரிமை கொண்டாடு வதைப் பெரிய தம்பி விரும்பவில்லை. அதனால்