36
அப்பாத்துரையம் - 34
தன் உரிமைக்கு அவமதிப்பு ஏற்படுகிறது. என்று அவன் கருதினான். ஆகவே அவன் சின்னத் தம்பியின் ஆர்வ உரைகளைத் தடுத்தான்.
'இதோ பார், சின்னத் தம்பி! ஒரு சோடு மாடுகள்தான் உனக்கு உரியவை என்பது உனக்கே தெரியும். ஆகவே ஆறும் உன்னுடையவை என்று இனிச் சொல்லாதே! எனக்கு அது கேட்கப் பெருங் கோபம் வரும்' என்றான்.
சின்னத் தம்பி தன் ஆவலால் பேசினானே தவிர. பெரிய தம்பியை அவமதிக்க எண்ணியதில்லை.ஆகவே, தவறாகச் சொல்லி விட்டதாக மன்னிப்புக் கோரினான். உழவு மீண்டும் தொடர்ந்தது.
அடுத்து, அப்பக்கம் யாராவது ஆள் வருவது கண்டவுடன் சின்னத் தம்பியின் ஆர்வம் மேலெழுந்தது, அவன் பெரிய தம்பியின் எச்சரிக்கையை மறந்தான். 'இதோ பாருங்கள்..' என்று தொடங்கினான்.
பெரிய தம்பிக்கு இந்தச் சொற்கள் வரவரக் கோப மூட்டின. சின்னத் தம்பியோ ஒவ்வொரு தடவையும் இனி இவ்வாறு கூறுவதில்லை என்று கூறிவிட்டு, அடுத்த ஆளை எதிரே கண்டதும், தன் வாக்குறுதியை மறந்து முன்போலவே பெருமை அடைந்தான்.
'இனி ஒரு தடவை மட்டும் இப்படிச் சொல்லு. உன் மாடுகள் இரண்டையும் மண்டையிலடித்துக்கொன்று தீர்த்து விடுகிறேன்!’ என்றான். பெரிய தம்பி.
சின்னத் தம்பி இதுகேட்டு நடுங்கினான். 'இனி வாய் திறப்பதேயில்லை' என்று உறுதி கூறினான்.
ஆனால், அடுத்த ஆள் எதிர்ப்பட்டவுடனே அவன் மறுபடியும் தன்னை மறந்தான். வழக்கப்படி பெருமையளந்து
விட்டான்.
'அடி உதவுவதுபோல அண்ணன் தம்பி உதவமாட்டான். இதோ உன் பெருமை என்ன ஆகிறது பார்!' என்று பெரிய தம்பி சீறி எழுந்தான். அருகிலே கிடந்த ஏர்க்காலால் சின்னத் தம்பியின் ரண்டு மாடுகளின் தலைமீதும் ஓங்கி அடித்தான்.
இரண்டும் முதலடியிலேயே சுருண்டு விழுந்தன!