பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

அப்பாத்துரையம் - 34

நோக்கினான்.விட்டிலிருந்து சற்று விலகி ஒரு மாட்டுக் கொட்டில் இருந்தது. வீட்டுக்கும் கொட்டிலுக்கும் டையே வைக்கோல் முதலியன பரப்புவதற்காக ஒரு தட்டையான கூரை இருந்தது. வீட்டின் மோடு ஒரு பாதியிலும் கொட்டிலின் மோடு மறு பாதியிலும் இதன்மேல் கவிந்திருந்தது. இது இடுக்கமான தாய் இருந்தாலும் குளிர் காற்றிலிருந்து பாதுகாப்பாகவும் ஓர் ஆள் படுக்கப் போதியதாகவும் இருந்தது. அதிலேயே இரவைக் கழிப்பதென்று அவன் உறுதி செய்தான்.

அந்த இடைவெளியில் கிடந்த வைக்கோலைப் பரப்பி,அதன் மீது அவன் கைகால்களை நீட்டினான். அவன் எதிர் பார்த்ததை விட அது நல்ல வாய்ப்புடையதாய் இருந்தது அறையிலிருந்த கணப்படுப்பின் காங்கை இடையிலுள்ள பலகணி கட கடந்து வீசியதால், குளிர் மிகுதியில்லாமல் அந்த இடம் கதகதப்பாகவும் இருந்தது.

அவன் படுத்த இடத்துக்கு நேரே தான் பலகணி இருந்தது. அதன் கதவுகள் அடைபட்டிருந்தாலும், சட்டங்கள் சிறிது இடை விட்டுத் திறந்திருந்தன. அதன் வழியே அவன் உள்ளே வீட்டில் இருப்பவர்களை நன்றாகப் பார்க்கவும், அவர்கள் பேசுவதைத் தெளிவாகக் கேட்கவும் முடிந்தது. உணவின் மணம் மூக்கைத் துளைத்தது. அவன் ஆவலுடன் உள்ளே இருப்பதையும் நடப்பதையும் கவனித்தான்.

உள்ளே பெரியதனக்காரன் இல்லை. ஆனால், அவன் மனைவியுடன் அவ்வூர்க் கோயில் குருக்கள் வந்து பேசிக் கொண்டிருந்தார். பெரிய தனக்காரனுக்குக் கோயில் குருக்கள் என்றாலே பிடிக்காது. கோயில் குருக்களைக் கண்டாலே அவனுக்கு அருவருப்பு ஏற்படும். இதனால் அவன் மனைவியுடன் கடவுளை வழிபடக் கோயிலுக்குள் போகாமல் கோபுரத்தை வழிபட்டுவிட்டு வீடு வந்து விடுவான். பெரிய தனக்காரன் தன் வீட்டின் திசைக்குக் குருக்கள் வரவும் பொறுக்க மாட்டான்.

னால், மனைவியோ கோயில் குருக்களையே கடவுளாகப் பாவித்தாள். கணவனில்லாத சமயம் பார்த்துக் கோயிலுக்குச் சென்று குருக்களுக்கு வாயும் வயிறும் நிறைய அமுதுகளும் கைநிறையப் பணமும் கொடுப்பாள். அன்று கணவனில்லாத சமயமாதலால், குருக்களுக்குத் தனி விருந்து சமைத்து அவரை அழைத்திருந்தாள்.