சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 3
39
குருக்கள்முன் வகைவகையான உண்டி சிற்றுண்டிகள் படைக்கப் பட்டிருந்தன. அவற்றின் மணமே சின்னத்தம்பி மூக்கைத் துளைத்தது. குருக்கள் ஆர அமர அவற்றை உட்கொண்டு பேசிக் கொண்டிருந்தார்.
சின்னத்தம்பி நிலைமைகளை ஊகித்துக் கொண்டான். குருக்களுக்கு அவ்வளவு அன்புடன் படைத்த அணங்கு தன் பசிக்கு ஒரு பிடி பழைய அமுதோ தங்க ஒரு மூலையோ தர மறுத்ததை எண்ணியபோது, குருக்கள் மீது அவனுக்கும் எரிச்சல் ஏற்பட்டது. கிட்டத்தட்டப் பெரியதனக்காரன் அளவிலேயே அவன் குருக்கள் வகுப்பை வெறுக்கத் தொடங்கினான்.
இச் சமயம் திடுமெனக் கதவு தட்டப்பட்டது. பெரிய தனக்காரன் எதிர்பாராத வகையில் வெளியூர்ப் பயணம் தடைபட்டுத் திரும்பி வந்திருந்தான். குருக்களையோ, உணவு வகைகளையோ அவன் கண்டால், அவன் மட்டற்ற கோபம் கொள்வான் என்று மனைவிக்குத் தெரியும். ஆகவே, கதவைத் திறக்குமுன் குருக்களை ஒரு பெரிய பெட்டியிலிட்டுப் பூட்டினாள். உணவு வகைகளை அங்கிருந்த ஒரு நிலைப் பெட்டியிலிட்டு மறைத்தாள். சின்னத்தம்பி இவற்றையெல்லாம் வெளியிலிருந்தே பார்த்தான்.
கதவு திறக்குமுன், திடுமென வீட்டுக் கூரையிலிருந்து ஓர் எலி சின்னத் தம்பி மீது பாய்ந்துவந்த விழுந்தது. சின்னத் தம்பி பதறிக் கீழே குதித்தான்.பெரியதனக்காரன் அவன் பக்கம் திரும்பி, "நீ யார், திருடனா! இங்கே எப்படி வந்தாய்!" என்றான்.
தன் கதையையும் நிலையையும் சின்னத்தம்பி உருக்கமாக எடுத்துக் கூறினான். தங்க இடமோ உண்ண உணவோ இல்லாமல், இடைக் கூரையில் படுத்து வைக்கோலைத் கடித்துக் காண்டிருந்ததாகக் கூறினான்.
பெரியதனக்காரனுக்குக்
குருக்களிடம் எவ்வளவு வெறுப்போ அவ்வளவுக்கு இயற்கையான தெய்வ பக்தியும், ஏழைகளுக்கு இரங்கும் உள்ளமும் இருந்தன. ஆகவே, அவன் சின்னத் தம்பியை வீட்டுக்குள்ளேயே வந்து உணவு உட்கொண்டு தங்கும்படி அழைத்தான்.