42
|–
அப்பாத்துரையம் - 34
'தம்பி, நான் ஒரே கடவுள்தான் உண்டு என்ற உறுதியான நம்பிக்கை உடையவன். குட்டித் தெய்வங்களிலோ, பேய்களிலோ எனக்கு நம்பிக்கை கிடையாது. ஆயினும் இன்று உன் மாயம் கண்டு நான் மிகவும் மலைப்படைகிறேன். உன் குட்டித் தெய்வத்தின் மாய ஆற்றல் என் கண்முன்னே ஒரு பேயைக் காட்ட முடியுமா?' என்றான்.
சின்னத்தம்பி தனக்குள்ளாகத் தேடிய வகைமுறை அவனுக்கு எளிதில் அகப்பட்டது.
'காட்ட முடியும் அண்ணா! ஆனால், அதன் உருவத்தைக் காண உங்களுக்கு பிடிக்காது!' என்றான்.
'அதனால் கேடில்லை. பேய் உருவம் தானே! எப்படி பிடிக்கும்? ஒரு சிறிது காட்டிப் பின் மறைத்து விடச் சொல்லு!' என்றான்.
சின்ன தம்பி மகிழ்ந்தான்.
“அப்படியே காட்டுகிறேன். அண்ணா!' என்றான்.
அவன் கையை இரு தடவை மெல்ல அழுத்தினான். 'கிரீச், கிரீச்' என்ற குரல் எழுந்தது.
குரலை மொழி பெயர்க்கும் பாவனையில் அவன் பேசினான்.
'இதோ இருக்கும் பெட்டி பூட்டப்பட்டுத்தான் இருக்கிறது. திறவுகோலால் அதை மெல்லத் திறவுங்கள். சிறிது திறந்து பார்த்த வுடன் அடைத்துப் பூட்டி விடுங்கள். ஏனெனில் அதில் ஒரு பேய் மனித உருவெடுத்துக் குந்திக் கொண்டிருக்கிறது' என்றான்.
அணங்கு தன் செயல் வெளிப்பட்டு விடுமோ என்று நடுங்கினாள்.சின்னத்தம்பியின் முகத்தை அச்சத்துடன் நோக்கினாள். அதிலிருந்த அமைதி அவள் அச்சத்தைச் சிறிது தணித்தது.
மனைவியிடமிருந்து திறவுகோல் வாங்கி, கணவன் மெல்லப் பெட்டியைத் திறந்து பார்த்தான். குருக்கள் உருவங்கண்டதே, அது பேயின் உருவம்தான் என்று அஞ்சி, திடுமெனப்பெட்டியை அடைத்து மீண்டும் பூட்டினான். அவனுக்குக் குட்டித் தெய்வத் திடம் நம்பிக்கை, பேய் நம்பிக்கை எல்லாம் ஏற்பட்டு விட்டது!