சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 3
47
ஐந்து சோடு மாடுகளின் தோலையும் உரித்து உலர்த்தினான். அவற்றைச் சாக்கிலிட்டுக் கொண்டு, சின்னத்தம்பியைப் போலவே புறப்பட்டான்.
அவனும் தன் நிலபுலங்களையும் வீட்டையும் தன் உறவினரிடமே விட்டுச் சென்றான்.
உறவினரில் சிலர் அவன் செயல் கண்டு அவனைக் கண்டித்தார்கள். சிலர் அவனுக்குப் பைத்தியம் என்று ஏளனம் செய்தார்கள். ஆனால், அவன் அவர்களையெல்லாம் பார்த்துச் சிரித்தான்.
'உங்களுக்கு என்ன தெரியும்! இது பணம் திரட்டப் புதுவழி. இதனால் அந்தச் சல்லிப்பயல் சின்னத்தம்பி எவ்வளவு பணம் ஈட்டிவிட்டான் தெரியுமா? எல்லாம் சில நாட்களில் நீங்கள் பார்ப்பீர்கள்' என்று இறுமாப்புடன் கூறிவிட்டுச் சென்றான்.
தோல் வாணிகர் தெருவில் சென்று. 'மாட்டுத்தோல் வேண்டுமா! மாட்டுத்தோல்!' என்று கூவினான்.
சிலர் கூப்பிட்டு விலை கேட்டனர்.
'ஒரு சோடு மாட்டுத்தோல் மரக்கால் பொன்' என்றான் அவன்!
சிலர் அவனைப் பைத்தியக்காரன் என்று கருதிப் பேசாமல் போயினர். சிலர் அவ்வாறே முகத்துக்கு நேரே சொன்னார்கள். சிலர் ‘இவ்வளவு பணம் வணிகத் தெரு முழுவதுமே கிடையாதே' என்றனர்.
ஆனால், அவனோ, 'பணம் இல்லையானால் பேசாமல் இருந்து தொலையுங்கள். இது செத்த மாட்டுத் தோல் அல்ல. நல்ல வேலை செய்துவந்த என்னுடைய மாடுகள். நானாகத் தடியால் அடித்துக்கொன்று தோலை உரித்துக் கொண்டு வந்திருக்கிறேன். இப்படிப் பட்ட மாட்டுக்கு ஒரு மரக்கால் பொன் என்பது உங்களுக்குத் தெரியாதா!' என்று கேட்டான்.
ல
அவன் பைத்தியம்தான் என்று எல்லாரும் முடிவு செய்தனர். அந்தத் தெருவில் ஒருவரும் வந்து விலை கேட்கவில்லை. ஆனால், அவன் தெருத் தெருவாகச் சென்றான். அவன் பைத்தியக்காரன்