பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

அப்பாத்துரையம் - 34

என்று கேள்விப்பட்டுச் சிறுவர், சிறுமியர், குறும்பர், வேலையற்றுத் திரிபவர் கும்மாளத்துடன் அவனைச் சூழ்ந்து செல்லத் தொடங்கினர்.

தெருத்தெருவாக அவன் சுற்றிக்கொண்டே இருந்தான். அவன் விற்கவும் செய்யாமல், போகவும் செய்யாமல் ஓயாது ஒரு மரக்கால் பொன் விலை கூறுவது கேட்ட சிலருக்குக் கோபம் வந்தது. அவர்கள் அவனை உலுக்கினர்! 'நேர்மையான விலை கூறுகிறாயா?' அல்லது இந்தத் திசைக்கு வராமல் போகிறாயா!' என்றனர்.

'நான் கேட்பதுதான் நேர்மையான தந்தால்தான் விற்பேன்!' என்றான் அவன்.

விலை! அது

ஒரு சில குறும்பர் ‘அவன் பைத்தியக்காரன்டா பைத்தியம்!’ என்று கூவினர். வேறு சிலர் 'ஒரு மரக்கால் பொன், ஒரு மரக்கால் பொன்' என்று கத்தினர். அவன் சிலரை அடிக்கக் கிளம்பினான்.

அதற்குள் சிலர், அவன் தோலைத் தட்டிப் பறித்துச் சென்றனர்.

'ஐயோ, என் செல்வம் பறிபோய் விட்டதே! மரக்கால் கணக்கான பொன்னைக் கொள்ளை கொண்டு விட்டார்களே!' புகுந்து அவன் ஓலமிடத்

என்று கடைகடையாகப்

தொடங்கினான்.

குறும்பர்களும் சிறுவர் சிறுமியர்களும் சூழ்ந்து கூவி வாணிகத்திற்கே தொல்லை கொடுத்தனர்.

வணிகர்கள் தொல்லை பொறுக்க மாட்டாமல் அவனைப் பிடித்து நையப் புடைத்தனுப்பினர். குறும்பரும் சிறுவர் சிறுமியரும் அத்துடன் விடாமல் கல்லாலும் கட்டியாலும் அவனைத் துரத்தி விடை கொடுத்தனுப்பினர்.

பெரிய தம்பி தன் செல்வத்துக்கும் தன் பெருமைக்கும் உரிய மாடுகளை இழந்து, மானமும் மதிப்பும்போய் வீடு நோக்கித் திரும்பினான். ஆனால் வீட்டிலுள்ளவர் முகத்திலோ, உறவினர் முகத்திலோகூட இனி விழிக்க முடியாது என்று கண்டு அவன் துயரத்தாலும் கோபத்தாலும் கனன்றெழுந்தான்.

தன்னை ஏமாற்றியதற்காகச் சின்னத் தம்பியைப் பழி தீர்த்து