பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

அப்பாத்துரையம் - 34

நள்ளிரவில் அவன் மெள்ள வீட்டினுள் புகுந்தான்.

கதவு திறந்து கிடந்தது கண்டு அவன் வியப்படைந்தான். ஆனால், அது பற்றி அவன் நீடித்துச் சிந்தனை செலுத்தவில்லை. அது தெய்வத்தின் உதவி என்று கருதினான்.

கட்டிலில் சாய்ந்துகிடந்த உருவை அவன் சின்னத்தம்பி

என்றே நினைத்தான்.

தலையில் ஓங்கி ஓரடி அடித்தான்.

குரல் எதுவும் கேட்கவில்லை. சின்னத்தம்பி ஓரடியிலேயே மாடுகள் போல மடிந்துவிட்டான் என்று அவன் கருதிக் கொண்டான். ஆயினும், உடலிலும் இரண்டடி கொடுத்து உறுதியை மேலும் வலுப்படுத்திக் கொண்டான்.

ஒரு பெரிய காரியத்தைச் செய்துமுடித்துவிட்ட மன நிறைவுடன் அவன் வீடு சென்றான்.

பெரிய தம்பியின் செயல்களை எல்லாம் சின்னத் தம்பி மூலையிலிருந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தான். தனக்கு வர இருந்த இடர் எத்தகையது என்பதையும், பெரிய தம்பி எத்தனை கொடியவன் என்பதையும் அவன் உணர்ந்தான்.

'நல்ல காலம். பாட்டி முன்பே இறந்து போயிருந்தாள். இல்லாவிட்டால் இந்த அடியால் அவளுக்கு எவ்வளவு அவதி ஏற்பட்டிருக்கும்! இருக்கட்டும், இதற்கெல்லாம் சரியான பாடம் படிப்பிக்காமல் இருந்தால் நான் சின்னத் தம்பியில்லை' என்று அவன் உள்ளூரப் புகைந்து கொண்டான்.

பாட்டி இறந்த செய்தி அதுவரை யாருக்கும் தெரியாது. ஆகவே, அவன் தன் பெட்டி வண்டியில் பாட்டியைக் கொண்டு போய், உட்கார்ந்திருக்கும் நிலையில் வைத்தான். உலாவச் செல்லுவதற்கு உடுத்தியதுபோல சிறந்த ஆடையணி மணிகளை உடுத்தினான்.

வழக்கமாகப் பாட்டியும் அவனும் வெள்ளிக்கிழமை தோறும் கோயில் போவதுண்டு. பணம் வந்தபின் ஒரு வெள்ளிக்கிழமை பெட்டி வண்டியில் போய் இருந்தான்.அன்றும் வெள்ளிக் கிழமையானதால், கோயிலுக்குச் செல்லும் பாவனையில் வண்டி ஓட்டிச் சென்றான்.