52
||-
அப்பாத்துரையம் - 34
'ஐயோ படுபாவி! என் உயிருக்குயிரான பாட்டியைக் கொன்று விட்டாயடா! பார்! மண்டையில் நீ இடித்த இடி! உன்னை விடப்போவதில்லை. வா காவல் நிலையத்துக்கு!' என்று இழுத்துப் பிடித்தான்.
அருந்தக உரிமையாளன் தன் முன்கோபத்தில் எத்தனையோ பழிகளைச் செய்ததுண்டு.ஆனால், என்றும் இதற்காக இன்றளவும் வருந்தியதில்லை; இன்றளவும் இவ்வளவு அஞ்சிய தில்லை; அவன் சின்னத்தம்பி காலில் விழுந்து கெஞ்சினான்.
'ஐயோ, நான் ஆய்ந்தோய்ந்து பாராமல் நடந்துவிட்டேன். வேண்டுமென்று செய்யவில்லை. தெரியாமல் செய்துவிட்டேன்! என் பிழை பொறுத்து என் மானத்தைக் காப்பாற்று.பாட்டியை செய்கிறேன். என் செல்வத்தையெல்லாம் உனக்கே தந்துவிட்டு வேற்றூர் போய்விடுகிறேன்' என்று பலவாறாக மன்றாடினான்.
ஆடம்பரமாக நானே அடக்கம்
சின்னத்தம்பி முதலில் மிகவும் கோபப்படுபவனாக நடித்து, இறுதியில் அவனுக்கு இரங்குவதாகப் பாவித்தான்.
சின்னத்தம்பியின் விருப்பப்படியே, தாமதமும் ஆரவாரமும் இல்லாமல், ஆனால், எல்லாச் சீர் சிறப்புகளுடனும் கிழவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. வாக்களித்தபடி அருந்தக உரிமையாளன் தன்னிடமிருந்த காசு பண முதலியவற்றை யெல்லாம் சின்னத்தம்பிக்குத் கொடுத்தான். அத்துடன் அருந்தகத்தையும் அதன் பொருள்களையும் விற்று அந்தப் பணத்தையும் அளித்து விட்டு வேற்றூர் சென்றான்.
பெருஞ் செல்வத்தை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு சின்னத்தம்பி வீடுவந்து சேர்ந்தான்.
சின்னத்தம்பியைத் தன் கையாலேயே கொன்றொழித்து விட்டதாகக் கருதிப் பெரிய தம்பி மிகவும் அமைதியுடன் வாழ்ந்தான். ஆனால், அவன் முன்னிலும் பெருஞ் செல்வம் உடையவனாய்விட்டது கேட்டு அவன் மலைப்புற்றான். முன்போல நட்பு முறையிலேயே காண வந்தான். ‘நான் என் கையாலேயே அடித்துக் கொன்று விட்டேனே. நீ எப்படித் திரும்பவும் பிழைத்தாய்! முன்புள்ள செல்வமல்லாமல் புதிய செல்வம் எங்கிருந்து வந்தது!' என்று கேட்டான்.