சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 3
பெரிய தம்பிக்குப் பாதி நம்பிக்கை பிறந்தது.
59
'சரி, ஆற்றோடு போகிற நீ வெளியே எப்படி வந்தாய்?' என்றான். ‘ஆறு வளைந்து வளைந்து போகிறது. அதில் அரைக்கல் போவதற்குள் குறுக்கே நிலவழியாய்ப் போனால் கால் கல்தான் இருக்கும். நான் திரும்பவும் ஆற்றுக்குள் தான் இறங்கப் போகிறேன்' என்றான்.
பெரிய தம்பிக்கு இப்போது முழுநம்பிக்கை ஏற்பட்டு விட்டது. கால்நடைச் செல்வத்தைத் தானே பெற வேண்டும் என்னும் அவாவும் எழுந்தது.
இவ்வளவு கால்நடைகள் உனக்குப் போதாதா, தம்பி! இந்திரன் பரிசுகளை நானேபோய்ப் பெறுகிறேன். எனக்கு இந்த ஒரு தடவை உதவி செய்' என்றான்.
சின்னத்தம்பி வழக்கம்போலச் சிறிது வாதாடிவிட்டுப் பின் வேண்டா வெறுப்புடன் இணங்குவதாகப் பாசாங்கு செய்தான். அத்துடன் பெரிய தம்பியைத் தன்னால் தூக்கிச் செல்ல முடியாது என்றும் சாக்குக் கூறினான்.
'நீ என்னைத் தூக்கிக்கொண்டு போக வேண்டாம். நானே ஆற்றங்கரைவரை வருகிறேன். நீ சாக்கிலிட்டு ஆற்றில் சரியான ம் பார்த்துப் போட்டால் போதும்' என்றான் பெரிய தம்பி.
க
சாக்கில் இறங்கும் போதும், 'நேராக நான் கீழே போகவேண்டுமல்லவா? பெரிய கல்லாகப் பார்த்து இரண்டு கல்லை உள்ளேயிட்டுக் கட்டு' என்றான்.
'கல் எதற்கு, உன் எடையே போதும்' என்று கூறிக் காண்டே, சின்னத்தம்பி இரண்டு கல்லையும் உள்ளே போட்டுக் கட்டினான். பெரிய தம்பி கிழவனைத் தூக்கி எறிந்தபடியே, அவனை நட்டாற்றில் எறிந்தான்.
முந்திய மரக்கால் பொன்னுடனும், அருந்தக உரிமைக் காரன் செல்வத்துடனும் புதிய கால்நடைச் செல்வமும் பெற்றுச் சின்னத்தம்பி சிலநாள் கவலையற்று வாழ்ந்தான். பெரியதம்பி வாணிகம் நாடி வெளியூர் சென்றதாகவே அவன் பெரியதம்பியின் உறவினரிடம் கூறினான். அத்துடன் சின்னாட்களில் யாவரும் பெரியதம்பியை மறந்துவிடுவார்களென்றே அவன் எண்ணி