60
அப்பாத்துரையம் - 34
யிருந்தான். ஆனால், திடுமென அவன் நல்ல காலம் அவனை விட்டோடியதுபோலத் தோன்றிற்று.
ஒருநாள், அவன் வீட்டினுள் ஒருவன் யானைமீது வீறுடன் புகுந்தான். அவன் எதிர்கொண்டு வரவேற்று, வந்தவன் முகநோக்கியதே அவன் முகம் கறுத்தது.
வந்தவன் பெரியதம்பியே என்று கண்டு அவன் வியப்பும் அதிர்ச்சியும் நடுக்கமும் கொண்டான்.
கற்களின் பளுவினால் பெரியதம்பியை இட்டுக் கட்டிய சாக்கு விரைந்து ஆழ்ந்தது. ஆனால், கட்டு மிகவும் இறுகி யிருந்ததனால் பெரிய தம்பி நீரில் திக்குமுக்காடி உதறிய உதறலில் கற்கள் சாக்கிலிருந்து பொத்துக்கொண்டு தனித்தனியே அமிழ்ந்தன. அவற்றின் கிழிவாய் வழியே வெளிவந்து பெரியதம்பி நீரில் மிதக்க நேர்ந்தது.ஆயினும் பிழைத்து வந்ததற்காக அவன் மகிழவில்லை 'இன்னும் கொஞ்சம் பொறுமையுடன் அமிழ்ந்திருந்தால் இந்திரனின் கால்நடைச் செல்வங்கள் பெற்றிருக்கலாமே! இன்னொரு தடவை என்னைக் கட்டி நீரிலி கட்டி நீரிலிட யார் கிடைப்பார்கள் என்றே அவன் தேம்பினான்.
அண்டை நாட்டு அரசன் யானைப்பாகன் அவ்வழி சென்று, அதே இடத்தில் யானையைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தான். பெரியதம்பி அவன் உதவி நாடினான். யானைப்பாகன் வயது சென்றவன். அனுபவ அறிவும் அன்பும் பாசமும் மிக்கவன். பெரிய தம்பியின் விசித்திர வேண்டுதலையும் கதைகளையும் கேட்டு அவன் முதலில் சிரித்தான். பின் மெல்ல அவனுக்குப் புத்தி புகட்டினான். 'அன்பனே! நீ மிக நல்லவன். ஆனால், சூதற்றவன். உன்னைச் சின்னத்தம்பி எத்தனை தடவை ஏமாற்றியும் உன் கோபத்தாலும் பேரவாவாலுமே நீ துன்பமடைந்து வந்திருக்கிறாய். நான் சொல்வதைக் கேள். பொறுமை, இன்னா செய்பவரையும் பொறுத்தருளல் ஆகியவை மனிதனைத் தெய்வமாக்கும். வை தமிழர் வணங்கும் தெய்வமாகிய திருவள்ளுவர் பெருமான் அருள் மொழிகள். நீ இவற்றை மதித்து நடப்பதானால் என்னுடனே வரலாம். என் முதுமை காரணமாக அரசன் புதிய பாகனைத் தேடிக் கொண்டிருக்கிறான். உன்னையே அமர்த்தி, என்னிடம் வைத்துப் பழக்குகிறேன்' என்றான்.