பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

||-

அப்பாத்துரையம் - 34

அண்ணன்மாருக்கு எவ்வளவு குளிராது பாவம்!' என்று இரக்கம் கொண்டான் குஞ்சான்!

அவன் தூக்குமரத்தில் ஏறி ஒவ்வொன்றாகக் கயிறவிழ்த்துப் பிணங்களைக் கீழே கொண்டுவந்தான ஏழு பிணங்களையும் தீயைச் சுற்றிக் குளிர்காய வைத்தான்.

பிணங்கள் தீயில் குளிர் காயும்போது, தீ சிலவற்றின் கந்தலாடையில் பற்றின. குஞ்சான் அச்சமயம் தன்னிடமிருந்த உணவு மூட்டையை அவிழ்த்து உணவு உட்கொண்டிருந்தான். ஆகவே, தொலைவிலிருந்தே அண்ணன்மாரை எச்சரித்தான். 'அண்ணன்மாரே, அண்ணன்மாரே! தீக்கு மிகவும் அருகே போகாதீர்கள். உடல் கருகிவிடும் என்றான்.

உயிரற்ற பிணங்கள் தாமாக விலகிவிடும் என்று யாராவது எதிர்பார்க்க முடியுமா? பலவற்றின் கந்தல்கள் பற்றத் தொடங்கின.

அட முண்டங்களே! தன்னைத்தானே காப்பாற்றி கொள்ளும் அறிவுகூடவா உங்களுக்கு இல்லை! சரி, நீங்கள் கன்னியருடனே குளிரில்தான் கிடக்க வேண்டும் என்று கூறிக் கொண்டு, அவன் பிணங்களை ஒவ்வொன்றாகத் தூக்குமரத்தில் ஏற்றித் தொங்க விட்டான். பின் தூக்குமரத்தடியில் தீயை மூட்டி அதன் வெது வெதுப்பின் அருகே உறங்கினான்.

காலையில் குறும்பன் ஐந்து பொன் பெற ஆவலோடு வந்தான். 'நடுங்கப் படித்துவிட்டாயல்லவா? கொடு ஐந்து பொன்னை' என்றான்.

'அண்ணே! அதோ தொங்கும் உன் நண்பர்களுக்குத் தீப்படாமல் குளிர்காயத் தெரியவில்லை. அரும்பாடுபட்டு, அவர்களைக் கீழே இறக்கி குளிர்காய இங்கே அழைத்துவந்தேன். பாவம், பலர் கந்தல்கள் கருகியிருக்கின்றன; இத்தகைய முண்டங்களா எனக்கு நடுங்கக் கற்றுக் கொடுக்க முடியும்? அவற்றை நம்பச் சொன்னாயே, நீ ஒரு மூடம்! ஐந்து பொன்னுக்கு வந்து விட்டாய்!' என்றான்.

அவன் ஒரு பேயாகத்தான் இருக்க வேண்டும் என்றஞ்சிக் குறும்பன் அவ்விடம் விட்டுக் கம்பி நீட்டினான்.