சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 3
67
சில நாட்களுக்குள் அவன் ஒரு பேரூரை அணுகினான். அங்குள்ள ஒரு தங்கல் மனையில் இரா உணவு உட்கொண்டு உறங்கினான். காலையில் மனையாளன் சுடுகஞ்சி வடித்துக் கொண்டே அவனிடம் பேச்சுக் கொடுத்தான்.
'தம்பி, நீ யார், உன் பெயர் என்ன?’
குஞ்சானுக்குத் தந்தை சொன்னது நினைவு வந்தது. ‘என் பெயர், ஊர் கூறாதே! கண்ணில் விழியாதே' என்று அவன் சொல்லியிருந்தான். ஆகவே ‘எனக்கு நான் யார் என்று தெரியாது, பெயரும் கிடையாது' என்றான்.
வியப்புடன் மனையாளன் 'உன் ஊர் எது? தாய் தந்தைகள் பெயர் என்ன?' என்று கேட்டான்.
'அவற்றை நான் சொல்லக்கூடாது!' என்றான் குஞ்சான்.
மேலும் வியப்புடன், 'என்ன காரியமாய் வந்தாய்? என்றான் மனையாளன்.
'எனக்கு நடுங்கத் தெரியவில்லை. அதை கற்றுக் கொள்ளத்தான் நாடு நாடாகத் தேடி வருகிறேன் என்றான். வன், அல்லது பைத்தியமா?' என்று எண்ணினான் மனையாளன்.ஆனாலும், வெளிப்படையாக அவன் இவ்வாறு கூறவில்லை!
'மட்டியா
‘நடுங்கத் தெரியவேண்டும். அவ்வளவு தானே!'
'அதோதெரிகிறதே, அந்த பாழுங்கோட்டையை பார்! அதில் மூன்று நாள் இருந்தால் எவருக்கும் நடுங்கத் தெரிந்துவிடும். அத்துடன், மூன்றுநாள் கழித்து வந்தால், இந்த ஊர் அரசன் மகளைக் கொடுப்பான். ஏனென்றால் அதில் பூதங்காத்த புதையல் இருக்கிறதாம்!’
'போய் அரசனிடம் கேள்!' என்றான்.
குஞ்சான் அரசனிடம் சென்றான்.
'நான் நடுங்கக் கற்றுக்கொள்ள வேண்டும். உயிர் கொடுத்தாவது கற்றுக் கொள்ள வேண்டும். தங்கள் பாழுங் கோட்டையில் மூன்று இரவுகள் தங்கினால் கற்றுக் கொள்ளலாம் என்று கேள்வியுற்றேன். போக விடை கொடுங்கள்!' என்றான்.