70
அப்பாத்துரையம் - 34
தீயருகே படுத்து உறங்கினான்.
காலையில் அரசன் இளவரசி, காவலருடன் வந்தனர். குஞ்சான் கிடப்பதைக் கண்டனர்.
'ஐயோ பாவம்! நடுங்கப் படித்துக் கொண்டுவிட்டான். ஆனால், ஓர் இரவுக்குள் உயிர் போயிற்று' என்றான் அரசன்.
'உயிரும் போகவில்லை. நடுங்கவும் கற்றுக் கொள்ள முடியவில்லை' என்று கூறி எழுந்தான் குஞ்சான்.
'ஆ..! நீ பிழைத்திருக்கிறாயா? இன்னுமா நடுங்கக் கற்றுக் கொள்ளவில்லை!' என்று யாவரும் வியப்படைந்தனர்.
இரண்டாம் இரவு நடுயாமத்தில் ஒரு பேரிரைச்சல் கேட்டது. அது வரவரப் பெருமுழக்கம் ஆயிற்று.
இறுதியில் அரைவடிவாகத் துண்டிக்கப்பட்டு உயிருடைய மனித உடல் மேல் நின்றும் விழுந்தது. அரை உடலிலிருந்து செங்குருதி கொட்டிற்று. அது 'கூகூ' என்று கத்திற்று.
குஞ்சான் அதற்குமேல் கத்தினான். 'அட பாவியே! உன் மறுபாதி எங்கே?' என்றான்.
மீண்டும் பேரிரைச்சலுடன் மறுபாதி வந்து விழுந்தது.
இரண்டும் ஒட்டின; அது மனித உருவில் ஒன்றரை மடங்கு பெரிய கோர உருவம்; ஓன்று சேர்ந்தது; அது குதித்துக் கும்மாளமிட்டது; விசிப்பலகையை சுட்டிக்காட்டி ‘அதை எனக்குத் தா!' என்றது.
'முடியாது' என்றான் குஞ்சான்.
உருவம் அவனைத் தள்ள, அவன் உருவத்தைத் தள்ள, அடிபிடியாயிற்று, இறுதியில் உருவத்தைக் குஞ்சான் கத்தியால் மீண்டும் இரண்டு துண்டாக்கினான்.
இப்போது பல
உருவங்கள் வந்து திரண்டன. ஒவ்வொன்றின் கையிலும் ஒரு முதுகெழும்பு இருந்தது. அவற்றினிடையே ஒரு தலையோடு உருண்டது. 'பந்து விளையாடுகிறாயா, மடையா!' என்று உருவங்கள் குஞ்சானைக்
கேட்டன.