பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 3

71

'மடையர்கள் நீங்கள்தாம். பந்தைப் பாருங்கள் பந்தை! கோணல் பந்து! இதை முதலில் சரி செய்கிறேன். பின் விளையாடலாம்' என்றான்.

அவன் தலையோட்டைச் சாணையில் தீட்டி உருண்டை ஆக்கினான். ஆட்டம் தொடங்கிற்று.

‘நீ பணம் கட்ட வேண்டும்' என்றன உருவங்கள்.

அவன் பணம் வைத்தாடினான். வென்றபோது அவனுக்கு ஒன்றும் கிட்டவில்லை. தோற்றபோது ஐந்து பொன்னில் சிறிது போயிற்று.

மணி இரண்டடித்ததும் உருவங்கள் மறைந்தன.

அவன் மீட்டும் தூங்கினான்.

மறுநாள் காலையில் அரசன் முதலியோர் வந்தனர்.

நடுங்கக் கற்றுக் கொண்டாயா?' என்று வியப்புடன்

கேட்டனர்.

'இங்கே நடமாடுகிற முண்டங்களுக்கு நடுங்கத் தெரிந்தால் தானே.எனக்குக் கற்றுக் கொடுக்கும்! இந்தக் கோட்டைஒன்றுக்கும் உதவாது' என்று அவன் இறுமாந்து பேசினான்.

அவர்கள் மலைப்புப் பெரிதாயிற்று. ஆனால், இளவரசி தோகை முகத்திலும் அவள் அருகில் நின்ற அவள் தோழி தூதுவளை முகத்திலும் புன்முறுவல்கள் தோன்றி மறைந்தன.

கடைசி இரவு வந்தது. 'எனக்கு நடுங்கத் தெரியவில்லையே! நடுங்கக் கற்றுக் கொடுப்பார் யாரோ?' என்று கூறியவண்ணம் விசிப்பலகையில் அமர்ந்திருந்தான். அச்சமயம் ஒரு பிணப் பெட்டியைச் சுமந்து கொண்டு, ஆறு நெட்டை உருவங்கள் அவனருகே வந்தன.

'ஆ, இஃது என் மைத்துனர் ஆயிற்றே! இறந்தா போய் விட்டார்? எங்கே, கீழே வையுங்கள் பார்ப்போம்' என்றான்.

உருவங்கள் பிணப் பெட்டியை அவன்முன் வைத்தன.

அவன் மேல்மூடியைத் திறந்தான். பிணத்தின் கன்னத்தில் கைவைத்துப் பார்த்தான். அது சில்லிட்டிருந்தது.