5. ஆராய்ச்சியின் திருமணம்
அறிவூர் என்ற ஊரில் நன்மதி என்றொரு மூதாட்டி இருந்தாள். அவள் பழங்குடியில் பிறந்தவள். நற்குடியில் வாழ்ந்தவள். ஆயினும் அவள் வாழ்வின் பிற்பகுதியில் அவள் ன்னல் அடைந்தாள். காலம் என்று மாறும்.நல்ல காலம் என்று வரும் என்று கேட்டுக் கொண்டே அவள், நாள் கடத்தி வந்தாள்.
அவளுக்குப் பின்மதி என்று ஒரு சிறுவன் இருந்தான். பெயருக் கேற்றபடி அவனுக்கு எப்போதும் முன்னறிவில்லாமல் இருந்தது. மாட்டைக் கொண்டுவா என்றால் தூக்கிக் கொண்டு வருவான். கழுத்தில் கயிற்றைப் பிடித்து இழுத்துவரத் தெரியாதா என்று தாய் கூறினால், அந்த அறிவுரையைப் பிடித்துக் கொள்வான். அடுத்த தடவை குழந்தையைக் கொண்டுவா என்றால், அதைக் கழுத்தில் கயிறிட்டு இழுத்து வருவான். மாட்டுக்கும் குழந்தைக்கும் வேறுபாடு தெரிந்த பின்னும், குண்டூசிக்கும் கத்திக்கும் அவனுக்கு வேறுபாடு தெரிவதில்லை. குண்டூசியைச் சட்டையில் குத்திக் கொண்டு வா என்று கூறியதைப் படித்துக் கொண்டு, கத்தியையும் அப்படியே குத்திச் சட்டையைக் கிழித்துக் கொண்டு வருவான்.
தாய் இறந்தபின் அறிவூரில் எல்லாரும் அவனைக் கேலி செய்தனர். சிலர் வைதனர். சிலர் அறிவுரைத்தனர். ஓர் அறிவுரை அவன் மூளைக்கு ஏறிற்று.
'உன் பின்னறிவுக்கேற்ற முன்னறிவுள்ள ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்துகொள் உன் வாழ்வு சரியாய்ப் போய்விடும்' என்றான் அந்த அறிவுரையாளன்.
அதுவே சரி என்று பின்மதிக்குப் புலப்பட்டது. அவன் புறப்பட்டான். தாயின் வீடும் பொருளும் விற்றான். அறிவுரை கூறிய நண்பன், அதை நல்ல விலைக்கு நண்பர்களுக்கு கொடுத்து,