சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 3
77
அவனிடம் ஒரு சிறு வெள்ளி மூட்டையைக் கொடுத்தான். அதில் ஐந்தாறு வெள்ளிப் பணங்கள் இருந்தன.
இதை அறிவுடன் பேணினால் உன் திருமணத்துக்கு உதவும். அறிவைப் பயன்படுத்தி இதை வைத்துப் பண்ட மாற்றுகள் செய்தால், இஃது உன் வாழ்வையே வளப்படுத்தவும் கூடும். எல்லாம் உன் முன்னறிவைப் பொறுத்தது' என்று கூறி நண்பன் அவனை அனுப்பினான்.
தோளில் வெள்ளிச் சுமையுடன் அவன் நடந்து சென்றான். வெள்ளிக் காசுகள் தோளை அழுத்தின. அவற்றின் பளு அவன் நடையைக் கடுமையாக்கிற்று.
பளுவற்ற நல்ல பொருளுக்குப் பண்டமாற்றுச் செய்ய வேண்டும் என்று அவன் எண்ணமிட்டவண்ணம் நடந்தான்.
வழியில் ஒருவன் ஒரு மட்டக் குதிரை மீதேறிச் சென்றான்.
‘ஆகா! இந்தச் சுமைக்கு அந்தச் சுமை என்ன வேற்றுமை? தை மனிதன் சுமக்க வேண்டியிருக்கிறது. அது மனிதனைச் சுமந்து பளுத் தெரியாமல் ஓடுகிறது. மனிதன் நடையைவிட விரைந்தும் செல்கிறது' என்று அவன் தனக்குள்ளாக முணுமுணுத்துக் கொண்டான்.
என்ன முணுமுணுத்துக் கொண்டு போகிறாய் தம்பி!' என்று குதிரை ஏறிச் சென்றவன் கேட்டான்.
பின்மதி தனக்குள்ளாகக் கூறியதை வெளியிட்டுக் கூறி, தன் வெள்ளிச் சுமையின் தாங்கவொண்ணாப் பளுவையும் எடுத்துக் விளக்கினான்.
குதிரை ஏறிச்சென்றவன் உள்ளூரச் சிரித்துக் கொண்டான். ஆனால், வெளிப்படையாக அவன்மீது இரக்கப்படுவதாகப் பாவித்தான்.
'நீ இளைஞன். இந்தச் சிறுவயதில் இந்தப் பளுவைச் சுமக்க நேர்ந்தது பற்றியும் கால்நடையாய் நடக்க நேர்ந்ததைப் பற்றியும் வருந்துகிறேன்' என்றான்.
இருவரும் அருகே அமர்ந்து அளவளாவினர். குதிரை மீது வந்தவன் நெடுந்தொலைவிலிருந்து வருவதாகவும், அருகிலுள்ள