சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 3
79
வீடு விற்ற விவரம், குதிரை வாங்கிய விவரம் ஆகியவற்றை எல்லாம் பின்மதி மாட்டுக்கார நண்பனுக்கு எடுத்துரைத்தான்.
'பாவம் நீ அலைந்து திரிந்தது போதாமல் விழுந்து உதைபட்டு வருத்தப்பட்டிருக்கிறாய், போகட்டும். ஏதாவது உண்ணப் பருகக் கொண்டு வந்திருக்கிறாயா? உண்டு குடித்து இளைப்பாறலாம்,' என்றான்.
வெள்ளிச் சுமை தவிரப் பின்மதி எதுவும் உணவாகக் கொண்டு வரவில்லை. அதை நினைத்து இப்போது வருந்தினான். 'நீ எதுவும் கொண்டு வரவில்லையா?' என்று மாட்டுக்காரனைக் கேட்டான்.
அவன் சிரித்தான். 'நான் ஏன் உணவு கொண்டு வரவேண்டும்.நண்பனே! பனை தென்னை கற்பகம், பசு காமதேனு என்று நீ கேட்டதில்லையா? என் பசு எனக்கு தூங்குமிடத்தில்
வீட ாக நிழல்தரும்; செல்லும்போது எறியாத குதிரையாகப் பயன்படும்; எனக்குப் பசிவிடாய் ஏற்பட்டால் உணவுடன், இனிய குடிநீரும் தரும்; இப்போது பார்' என்றான்.
மாட்டின் அருகில் அமர்ந்து ஒரு குவளையில் அவன் பால் கறந்து நண்பனுக்குத் தந்தான். முன்பே வைத்திருந்த பால்கட்டி, பாலடையில் பாதியும் உணவாக அளித்தான். இன்னொரு குவளையில் கறந்து மறுபாதியுடன் தானும் உண்டான்.
'குதிரையின் வறுமை தீர இந்த மாட்டுச் செல்வம் நமக்குக் கிடைக்கக்கூடாதா?" என்று பின்மதி தனக்குள்ளாகக் கூறிக் காண்டான். அதை மாட்டுக்கார நண்பனிடம் வெளிப்படை யாகக் கூறி அவனிடம் அதைக் கெஞ்சிக் கேட்கவும் தவறவில்லை. இதற்கே எதிர்பார்த்திருந்த மாட்டுக்காரன் மாட்டைவிட்டுப் பிரிய மனமில்லாதவனாக நடித்தான். இறுதியில் மாட்டிடம் பிரியா விடைபெற்றுக் கொண்டு குதிரையுடன் சென்றான்.
ஓரிரு நூறு வெள்ளிக்கு மேற்பட்ட குதிரை ஓர் ஐம்பது வெள்ளி பெறாத மாட்டுக்குக் கிடைத்தது பற்றி மாட்டுக்காரன் அகமகிழ்ந்தான்.
மாடு உண்மையில் குதிரையாகப் பயன்படவில்லை. அவன் ஏற முயன்றால் அது படுத்துக் கொண்டது. அஃது அடிக்கடி கொம்புகளால் அவன் விலாவைக் கிளறிக் காயப் படுத்திற்று.