பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

||-

அப்பாத்துரையம் - 34

ஆவலாயிற்று. அவன் அவர்கள் காட்டிய வீட்டை நோக்கி எட்டி நடந்தான்.

முன்மதி, முன்னறி பெருமாள், மூதறிவணங்கு, ஆராய்ச்சி என்ற பெயர்ப் பொருத்தங்களை அதுவரை அந்த ஊரார் கவனித்ததில்லை. இதற்குக் காரணம் எல்லாம் அந்த ஊர்த் தெய்வத்தின் பெயராயிருந்தது என்பதே. ஆனால், முன்மதியில் பெண் பார்க்கப் பின்மதி வந்திருக்கிறா னென்றதே ஊரிலும் தெருவிலும் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னறிபெருமாள் வீடு, ஒரு சிறிய ஊர்க் கூட்டத்துக்கு இடமாயிற்று. ஆடவரும் பெண்டிரும் முதியவரும் இளைஞரும் மணமானவரும் ஆகாதவரும் அங்கே வந்து குழுமினர். அவர்களிடையே பெண் பேச்சுத் தொடங்கிற்று!

பெண் வீட்டார் முதலில் மாப்பிள்ளை பேர், ஊர், குடி முதலிய விவரங்களைக் கேட்டார்கள். ஆனால், இவ்வகையில் ஊரார் மாப்பிள்ளையைப் பேசவிடவில்லை. வழியிலே அவன் கதைகளைக் கேட்டு வயிறு குலுங்கச் சிரித்தவர் பலர் அங்கே வந்திருந்தனர். அவன் நேரடியாகப் பேசக் கேட்டுப் பெண் வீட்டார் அவனை ஏளனம் செய்வதை அவர்கள் விரும்பவில்லை. ஆகவே, அவன் குடிப்பெருமை, செல்வநிலை ஆகியவற்றைப் பெருக்கிக் கூறினர். அவன் அறியாச் செல்வச் சீரழிவைப் பெருந்தன்மையாகவும், ஊதாரித்தனமாகவும் தீட்டிக் காட்டினர். இந்த மாப்பிள்ளையை விட்டால், இனி ஈடு சோடான மாப்பிள்ளை கிடையாது என்ற எண்ணத்தைப் பெண் வீட்டார் உள்ளத்தில் பதிய வைத்தனர்.

நங்கை ‘ஆராய்ச்சி' பெண் வீட்டாரிடையே நடு நாயகமாக வீற்றிருந்தாள்.மாப்பிள்ளை புகழில் மிகுதியும் மகிழ்ந்து களிப்பும் எக்களிப்பும் கொண்டவள் அவளே. மாப்பிள்ளை முன் தன் புகழும் பெருமித அறிவும் தோன்ற அவள் தன்னைச் சீர் செய்து கொண்டு அமர்ந்திருந்தாள்.

பின்மதி பெண்ணின் அழகை நேரில் பார்த்துக் கொண்டான். முன்னழகுக்குப் பின்னழகு எப்படியோ என்ற ஐயம் தீர, அப்படி இப்படிச் சுற்றி வந்து பார்த்தும் மன நிறைவே அடைந்தான். பின்தான் தேடிவந்த பெண்மை இலக்கணத்தைக் கூறினான். 'பெண் முன்னறிவுள்ளவளாக இருக்க வேண்டும்,