பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

83

பட்டைகள் சேற்றால் இப்போது வலிமை பெற்றிருந்தன. சேறு காயக்காயக் காயங்களும் ஆறியிருந்தன. ஆயினும், நள்ளிரவுக்குள் அதன் அழிவு பெரிதாயிற்று. ஆனால், நள்ளிரவில் நடந்த நிகழ்ச்சி மரத்துக்குப் பாதுகாப்பளித்தது. அவர்கள் வாழ்வுக்கும் புது வழிவகுத்தது.

விலங்குகளின் ஆரவாரம் சட்டென நின்றது. அதனிலும் வீறுமிக்க பிறிதோர் இரைச்சல் கேட்டது. அஃது உண்மையில் மயில்களின் கூக்குரலே. அந்தக் காட்டில் தெய்வ மயில்களின் கூட்டம் ஒன்று வாழ்ந்தது. அம் மயில்கள் எப்போதும் இரைக்காகத் தொலை தூரம் சென்று வந்தன. அன்று இரவு குட்டையில் சிதறிய பிட்டுகளின் மணம் அவற்றை அப்பக்கம் ஈர்த்தன. அவற்றின் ஆரவாரம் கேட்டே விலங்குகள் ஓடின. மரத்துக்குப் பின்னிரவு முழுவதும் ஓய்வுகிட்டிற்று.

விடியும்வரை மயில்களின் கூச்சல் அடங்கவில்லை. பிட்டுத்துகளுக் காக அவை ஒன்றை ஒன்று நெருக்கித் தள்ளிக் கொண்டே இருந்தன.

விடியுமுன் மயில்கள் பறந்தோடி விட்டன. செங்கழுநீர் காலையில் குட்டை அருகே சென்று பார்த்தாள். சிதறுண்ட மயில்களின் இறகுகள் எங்கும் பச்சைப் பசேலென்று மின்னின. வானவில்லின் ஏழுநிறங்களும் அவற்றிடையே கண்ணைக் கவர்ந்தன. அவள் மெல்ல அவற்றைப் பொறுக்கினாள். கட்டாகக் கட்டினாள். அன்று கையில் காசில்லாத குறையை அது நீக்கிற்று. போதணங்கு அதை நல்ல விலைக்கு நகரில் விற்றாள். சிறிது பணத்துக்கு முன்போலப் பிட்டு வாங்கினாள். இரக்கமுள்ள கடைக்காரன் இப்போது முன்னிலும் மகிழ்ச்சியுடன் நிறையப்பிட்டு வழங்கினான். ஏனென்றால், மயில் இறகின் ஒரு பெரும் பகுதி முதலில் அவனுக்கே விலைக்குக் கிட்டிற்று.

அவர்கள் உணவுக் கவலை தீர்ந்தது. மரத்தின் பாதுகாப்பும் மிகுந்தது. சேற்றடையும், மயிலெச்சமும் விலங்கின் இடர்களை முற்றிலும் போக்கின. அவர்கள் கையில் வரவரப் பேரளவில் பணம் திரண்டது.

மூதணங்கின் அறிவுரைப்படி, செங்கழுநீர் மயில்களுக்கு இன்னும் உயர்ந்த உணவு வகைகள் தூவினாள். மயில்கள் விடிந்த