பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

103

புறப்படுங்கள்.பாணன் ஆறு வேலியிலும் ஆறு நூறு அரிவாள்கள் இருக்கின்றன. ஆளுக்கு ஒன்றாக எடுத்து, ஓர் இரவுக்குள்ளே,ஆறு வேலி நிலத்தையும் அறுவடை செய்து முடியுங்கள்.வைக்கோலை ஒருபுறம் போர் போராகக் கட்டுங்கள். நெல்லை ஒருபுறம் அம்பாரம் அம்பாரமாகக் குவியுங்கள்” என்றது.

ஒரே இரவில் பேய்கள் யாரும் வியக்கத்தக்க வண்ணம் இத்தனையும் செய்தன. பாணன் பத்தாயத்தில் நெல் பொங்கி வழிந்தது. அதன் வெளியேயும் அப்ாரங்கள் கிடந்தன. அவன் களமுழுவதும் வைக்கோல் போர்கள் நிறைந்தன.

இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு பாணனும் அவன் மனைவியும் கூத்தாடினர். வேலையாட்கள் இல்லாமல் எப்படி அவன் நெல்லும் வைக்கோலும் களம் சேர்ந்தனவென்று பண்ணை ஆட்களும், தலைவரும் வியந்தனர். அவனுக்குத் தனித் தெய்வ உதவி இருக்க வேண்டும் என்று கருதினர். அவனை அதுமுதல் பயபக்தியுடனே நடத்தினர்.

மகிழ்விடையேகூட

பாணன் பழனக்கிழான் செல்வமும் வாழ்வும் பெருகிற்று. பூவணி பொன்னணியாகத் திகழ்ந்தாள். ஆனால், அந்த டையேகூட, பாணனுக்கு அரசப் பேய் நினைவு மாறவில்லை. அதற்குத் தனி நன்றியும் வணக்கப் பரிசும் கொண்டு, உணவுடன் அவன் பூவரச மரத்தை அணுகினான். அங்கே அவன் மனைவியும் வந்தாள், இருவரும் காத்து நின்றனர். ஆனால், பேயையே காணவில்லை. அவர்கள்முன் ஒரு கிழிகிடந்தது. அதில் ஓர் ஓலை நறுக்கு இருந்தது. பாணன் அதை எடுத்து வைத்துக்

கொண்டான்.

அவர்கள் புங்கமரத்தை அணுகினர். அங்கும் ஒரு பேயின் அரவத்தைக் கூடக் காணவில்லை. ஆனால், இங்கும் நூற்றுக்கணக்கான கிழிகள் கிடந்தன. பூவணி அவற்றைத் திரட்டி எடுத்துக் கொண்டாள்.

வீட்டுக்கு வந்து அவர்கள் கிழிகளைப் பிரித்துப் பார்த்தனர். அரசப் பேயின் கிழி அத்தனையும் நவமணிகளாயிருந்தன. மற்றப் பேய்களின் கிழிகளில் பொன்னும் வெள்ளியும் இருந்தன. அரசப்பேயின் கிழி மீதுள்ள ஓலை நறுக்கை அவன் எடுத்துப் பார்த்தான். “பழங்குடி நண்பனே! பாணனே! நீ இனி யாரையும்