பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

||–

66

அப்பாத்துரையம் - 35

“அரசே, பெருந்தன்மையுள்ள உள்ளம் படைத்தவர்கள் தாங்கள் என்பதில் ஐயமில்லை. அத்தகையவர் தாமாக ஒரு பெண்ணின்மீது, அதுவும் காதலையும் காதலுறுதியையும் நம்பியிருக்கும் ஒரு துணையற்ற பெண்ணின் மீது, இக் கொடுமை செய்ய முடியாது. காதலுணர்வுடன் போட்டியிடத்தக்க நட்புரிமையுடைவர்களே உங்களை அவ்வகையில் தூண்டிக் கலைத்திருக்க வேண்டும். அவர்கள் தவற்றையும் தெரிவித்துப் பின் திருத்தம் நாடுவதே முறை" என்றாள்.

மன்னன் சிறிது நேரம் தயங்கினான். "நான் தான் மன்னன். எல்லோருடைய பிழைகளும் என் பிழைகளே. அவற்றுக்கான தண்டனை பெற வேண்டியவனும் நானே” என்றான்.

“அப்படியானால், உமக்கு இப்போதே முழு விடுதலை தந்தேன், அரசே! அத்துடன் உம் நண்பர்கள் குடிகள் யாவரின் விடுதலையுரிமையும் இனி உங்களுடையதே; ஆனால்..ஆனால்.." என்று தயங்கினாள்.

“ஆனால், என்ன அம்மணி? பெருந்தன்மை மிக்க நீங்கள் எது கூறினாலும் செய்யத் தடையில்லை" என்றான் அரசன்.

"அப்படியானால் மகிழ்ச்சி; நான்தான் கொங்குலா மலர்"

என்றாள்.

66

அரசன் நிகரிலி அணைகடந்த வெள்ளம்போல் உணர்ச்சிப் பெருக்குடன் அவளை அகமார அணைத்துக் கொண்டான். 'நான் செய்த தவறு மிகப் பெரிது. என்குடிகளில் கடைப்பட்டவர் செய்தால்கூடப் பெரிது, அதை மன்னித்துவிடு கொங்கு; ஏனென்றால், இனி நீ தான் அரசி, என் நண்பர்களையும் குடிகளையும் உன் விருப்புடனேயே விடுவித்துவிடு" என்றான்.

காவலர் எல்லாரையும் விடுவித்தனர். நண்பர் செய்தியறிந்து மனமாரத் தம் தவறான எண்ணத்துக்கு வருந்தினர்.

சிலநாள் அரசன் நிகரிலியும், அரசி கொங்குலா மலரும் அமைந்து வாழ்ந்தனர். ஆனால், அடிக்கடி அரசி கொங்குலா மலரின் முகத்தில் ஏதோ ஒரு துயரம் நிழலாடுவதை அரசன் கவனித்தான். மெல்ல அவள் துயரை உசாவி யறிந்தான். "உங்கள் வரவால் நான் மீட்சியடைந்தேன். மீண்டும் அரச வாழ்வு