பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

||–

அப்பாத்துரையம் - 35

திறமையின்மூலம் எனக்குக் கட்டாயம் உச்ச உயர்பணியோ அல்லது அதற்கடுத்த பணியோ கிடைக்கலாம். அத்துடன் புகழும் பாராட்டும் சிறப்பும் கிட்டுவது உறுதி. இவ்வாறு எண்ணிய வனாய் நான் மாலையிலிருந்தே புறப்படுவதற்கு வேண்டிய முன்னேற்பாடுகளெல்லாம் செய்தேன். அகமகிழ்ச்சி யுடன் செய்தேன்; ஆனால், என் ளமனைவியினுடைய கண்கள் அதேசமயம் என்னைக் கவலையுடன் கவனித்துக் கொண்டிருந்தன.

அவளைப் பார்க்கப் பரிவிரக்கமாயிருந்தது. நான் சட்டையின் தூசியைத் துடைக்கும்போது, அவள் உள்ளம் துடித்தது. நான் துப்பாக்கியைத் துடைத்து மெருகு கொடுத்தபோது, அவள் நெஞ்சு வெம்பிற்று. இவற்றை யெல்லாம் நான் சிறிதுநேரம் கண்டும் காணாதவனாகவே இருந்தேன். அவள் பக்கம் பார்வையைத் திருப்பினால் என்ன நேரும் என்பது எனக்குத் தெரியும். பகைவரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இல்லாத ஆற்றல்- அச்சுறுத்துக் கடிதங்களுக்கு இல்லாத வலு- அவள் நீல விழிகளுக்கும் அதில் கலங்கும் பனிநீருக்கும் உண்டு என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

அவளை நான் நன்கு அறிவேன். அவள் பெண்தான் ஆனால், கோழையல்ல! என்னை இடரிலிருந்து காக்க அவளைத் துப்பாக்கி ஏந்திக்கொண்டு வரச்சொன்னால் அவள் வரத் தயங்கமாட்டாள். அவளைக் கோழையாக்கியது அவள் என்மீதுகொண்ட அன்பு ஒன்றுதான். இந்த அன்பு என்னை ஒன்றும் செய்யவில்லை. ஆனால், அது அவளை ஒவ்வொரு நாளும் ஆயிரம் ஐயங்களுக்கும் அச்சங்களுக்கும் இரையாக்கியது. இந்த அச்சங்களையும் ஐயங்களையும் நீக்குவதற்கு ஒரே ஒரு வழிதான். அவளிடம் நன்மை தீமைகள் எவற்றையும் ஒளிக்காமல் கூறிவிடுவது ஒன்றே அது.

கற்பனை அச்சங்களும் ஐயங்களும், மெய்யான அச்சங்களையும் ஐயங்களையும்விட அன்புள்ளத்தில் மிகுதி துன்பம் உண்டுபண்ணும் என்பதை நான் அறிந்திருந்தேன். எனவேதான், 'இன்று என் வீர இளஞ்சிறுவன் எங்கும் வெளியேறவில்லையே' என்று அவள் என்னிடம் கேலியாகக் கேட்டபோது, அவளிடம் மட்டும் உண்மையைக் கூறிவிட்டேன்.