பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

189

ஆயினும், நான் உங்கள் உலகிலேயே மூன்றாண்டுகள் வேறு எங்காவது சென்று வேலைசெய்ய விரும்புகிறேன்,” என்றான்.

மைந்தனை விட்டுப் பிரிய மனமில்லாவிட்டாலும், நிலைமையுணர்ந்து தகப்பன் வேண்டா

வெறுப்பாக ணங்கினான். நீண்ட வழிப்பயணத்துக்கு உதவும்படி பிள்ளைக்கு அவன் ஓரிணை மிதியடிகளும் ஓர் இரும்புக்கோலும் குடையும் பரிசாக அளித்தான்.

இரும்புக்கோலை ஊன்றி நித்திலன் சாய்ந்ததும் அது வளைந்தது. அவன் அதைத் தன் கையைச் சுற்றிக் கடகமாக வளைத்துக் கொண்டான். மிதியடி கொஞ்சத் தொலைவு போகுமுன் தேய்ந்துவிட்டது. குடையைப் பிடித்து அவன் நடக்கும் நடையில், கம்பு தவிரக் குடையின் மற்றப்பகுதி பின்னோக்கிக் காற்றில் பறந்து விட்டது.

"அம்மா உலகுக்கும் அப்பா உலகுக்கும் எவ்வளவு வேற்றுமை. அப்பா மட்டும் தங்கமான குணமுடையவராய் இராவிட்டால், இந்த உலகத்தை நான் தீண்டவே மாட்டேன் என்று நித்திலன் தனக்குள் கூறிக் கொண்டான்.

""

ஆயினும் நிலஉலகின் மக்களைத்தான் அவனுக்குப் பிடிக்கவில்லை. கதிரவனொளி, காற்று, எல்லையற்ற நிலப்பரப்பு, ஏரி, அருவி, கானாறு ஆகிய இயற்கைக் காட்சிகள் யாவும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தன. புயலிடையே அவன் உலவும் போது, புயலின் ஆற்றல் அவன் நாடிநரம்புகளில் முறுக்கேற்றி அவனுக்குத் தம் ஆற்றலைக் கொடுப்பது போன்றிருந்தது.

டு

ஓரிரவு, ஒருபகல் முழுதும் நடந்து சென்ற பின் அவன் ஒரு சிற்றூரை அடைந்தான். ஊர்ப்புறத்தே ஒரு பெரிய பண்ணைவீடு இருந்தது. அதில் மலைபோல வாரி அடுக்கிய வைக்கோல்போர் ஒன்றைக்கண்டு, அதை அவன் அழகுபார்த்துக்கொண்டு நின்றான்.

பண்ணைக்காரன் அவனைப் பார்த்து, "நீ யார் தம்பி, எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்டான்.

“நான் நெடுந்தொலைவிலிருந்து வருகிறேன்; ஏதாவது வேலை கிடைக்குமா என்றுதான் தேடித் திரிகிறேன்;” என்றான் நித்திலன்.