பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

5

பேச்சின் முற்பகுதியை அவள் செவிக் கொள்ளவில்லை. ஆனால், பிற்பகுதியை அவள் கேட்டாள். “அதுவே உங்கள் புதல்வன் உயிர். இந்த மாயத்தை யாரிடமும் கூறாதேயுங்கள். அதே சமயம் அதனை உயிர்போல் பேணுங்கள். அது பாதுகாப்பாய் இருக்கும்வரை,புதல்வனை இடர் அணுகாது”. இந்த வாசகங்கள் மட்டும் அவளுக்குத் தெளிவாகப் புரிந்தன.

கடம்பன் பிறந்தது முதல், செந்தாமரையின் புகழே வளர்ந்தது. மன்னன் கருத்து முழுவதும் கடம்பனிடமும், செந்தாமரையிடமுமே உலவிற்று. கயற்கண்ணி அரசியாகவே இருந்தாள். ஆனால், அரசன் அவ்வப்போதுதான் அவளைக் கவனிக்க முடிந்தது. மக்கள் பாராட்டு முன்னிலும் மிகுதியாக, செந்தாமரை பக்கமே சென்றது. இதனால் அவள் உள்ளத்தில் பொறாமை தோன்றி வளர்ந்தது. கடம்பன் அவள்மீதும் அன்பாகவே இருந்தான். ஆனால், அவன் மீது அவளுக்கு மெல்ல மனக்கசப்பு உண்டாயிற்று.எல்லாரும் தன்னைப் புறக்கணிப்பதற்கு அவனே காரணம் என்று அவள் எண்ணினாள்.

கடம்பன் அவளிடம் அவ்வளவு அன்பு காட்டாவிட்டால், அவள் மனக்கசப்பும் பொறாமையும் வளர்ந்திருக்கமாட்டா.அவன் அன்பின் ஆர்வத் துடிடிப்பே அவளை உறுத்திற்று; அவற்றை வளர்த்தது. தற்செயலான நிகழ்ச்சிகளால் உண்டான பொறாமை மெல்ல மெல்லத் திட்டமாக விளைந்தது. அந்நிகழ்ச்சிகளே அதற்குச் செயல்வடிவான உருவமும் கொடுத்தன.

கடம்பன் பொற்பந்து ஆடினான். பந்து அடிக்கடி சிற்றன்னையின் மாளிகைக்குள் சென்று விழுந்தது. அதை எடுக்க அவன் அங்கே அடிக்கடி ஓடிச் சென்றான். அவன் பட்டம் பறக்கவிட்டான்.பட்டம் அறுந்து அந்த மாடியிலேயே அடிக்கடி இறங்கிற்று. அவன் அதைக்கேட்டுப் பெறச் சிற்றன்னை மாடியில் தடதடவென்று ஏறினான். அவன் ஒரு மணிப்புறாவைப் பறக்கவிட்டு வேடிக்கை பார்ப்பதுண்டு. மணிப்புறா பெரும்பாலும் கயற் கண்ணியின் மெல்லாடைகளுக்குள்ளேயே சென்று சரணடையும். அதை மன்றாடிப் பெற அவன் மீண்டும் மீண்டும் அவளிடம் சென்றான்.

நாடி வந்த பொருளை ஒன்றிரண்டு தடவை அவள் பேசாது கொடுத்தாள். பின்பு, "இப்படி ஓயாது வந்து வந்து கேளாதே.