பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(248

அப்பாத்துரையம் - 35

12. வாயுரை உதவியா, கையுறை உதவியா

1118 ஆம் ஆண்டு மலையாள நாட்டில் பஞ்சத்தால் துன்புற்ற மக்களுக்கு உதவிபுரியும்படி கூட்டப்பட்ட கூட்டம் ஒன்றில் இளைஞரும் மங்கையரும் பலர் முன்வந்து மலையாள மக்களின் துயரை விரித்துப் பேசினர். இன்னும் பலர் அவர்கள் மீது தமக்கு ஏற்பட்ட இரக்கத்தை வானளாவப் புகழ்ந்து கற்பனைக் கோட்டைகள் கட்டினர். இவற்றை யெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஒரு கிழவி மேடையேறி நின்று, “என் நண்பர்களே, என்னிடம் இரக்கம் மிகுதியாக இல்லை. இதோ இவ்வளவுதான் இருக்கிறது.” என்று பத்து ரூபாத் தாள்கள் இரண்டி ரண்டினை எடுத்து

மேடைப் பலகை மீது வைத்தாள்.

அதற்கு மேல் எல்லாரும் வெறும் பேச்சுப் பேச வெட்கித், தம்மாலானதைக் கொடுக்கத் தொடங்கினர். விரைவில் அக்கிழவியின் புண்ணியத்தால் ஒரு நல்ல தொகை சேர்ந்து மலையாளத்து ஏழை மக்களுக்கு உதவியாயிற்று.