பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 4

11

உயிர் மணிமாலையைப் பகலில் அரசி அணிந்ததால் உடலைவிட்டு உயிர் பிரிகிறது. இரவில் அதை அவள் அணியாதிருப்பதாலேயே இளவரசன் உயிர் மீண்டும் வந்து பாருந்துகிறது. இத்தனையும் இருவருக்கும் விளங்கின.

உயிர்மாலை அரசியிடம் இருக்கும்வரை கடம்பன் பகலில் உயிர்ப் பிணமாகவே கிடக்க வேண்டும். இரவில் மட்டுமே வாழ முடியும். உயிர் மாலையை மீண்டும் பெற முடியுமா என்று இருவரும் கலந்து பேசினர். ஒருவழியும் தெரியவில்லை. ஆனால் அதுமுதல் மாடலன் அடிக்கடி இரவிலும் வந்து, கடம்பனது தனிமையில் பங்கு கொண்டான்.

பாய்மா நாட்டிலிருந்து பல காத வழிக்கு அப்பால் இடவை என்று மற்றொரு நாடு இருந்தது. அதன் மன்னன் மருணீக்கியைப் பகையரசர் சூழ்ந்து போரில் மடிவித்தார்கள். அவன் இன்னுயிர்த் துணைவி எழினி தன் புதல்வி வாணகையுடன் நாடு நாடாக, காடு காடாக அலைந்து திரிந்து வந்தான். ஒருநாள் மாலை அவர்கள் வேனில் மாடத் தருகேயுள்ள செய்வனத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்தனர்.

நடந்தலைந்த அலுப்பால் இருவருமே மிகவும் களைத்துப் போயிருந்தனர். பசியும் விடாயும் இருவரையும் பீடித்தன. ஆனால், நங்கை வாணகையின் நிலை கவலைக்கிடமாக இருந்தது. பஞ்சு படப்பொறாத அவள், நீர் விடாயால் நிலை கலங்கினாள். தாய் அவளை ஒரு சிலையடியில் இருத்தி விட்டு வனத்தில் நுழைந்தாள்.

நெடுநேரம் திரிந்தபின், எழினி ஓர் ஊற்றையும் சில கனி மரங்களையும் கண்டாள்.கனிகளில் சிலவற்றை அவள் பறித்தாள். ஓர் இலையைத் தொன்னையாகச் செய்து அதில் நீர் மொண்டு கொண்டாள். தன் பசி விடாய்களைக்கூடப் பொருட்படுத்தாமல், அவள் புதல்வியைக் காண விரைந்தாள். ஆனால், விட்ட இடத்தில் அவள் புதல்வியைக் காணவில்லை. எங்கும் பரபரப்புடன் தேடினாள். எதோ காலில் தடுக்கி அவள் விழுந்தாள். விழுந்தவள் எழுந்திருக்கவேயில்லை. அவள் உயிர் பிரிந்தது.