பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை இன்பம்

279

கொஞ்சம் பாடு பார்ப்போம்!' என்றார். அரையுயிர் வந்த வனாய் ளைஞன் பாடினான். மணவாளநம்பி அவற்றில் ஆங்காங்குச் சீர்திருத்தம் செய்து அப்பாடல்களைப் பின்னும் நயப்படுத்தியபின் 'உன் பொய்யை மெய்யாக்கிவிட்டேன். இனி நீ கவலையின்றி உண்மையிலேயே என்மாணவன் என விளம்பரம் செய்யலாம்' என்றார்.

மணவாள நம்பியிடமிருந்து இசையை மட்டுமின்றி வாழ்வின் இசையாகிய பெருந்தன்மை யையும் அவன் கற்றுக்கொண்டான்.